புதன், 13 மே, 2026

கேரளா நகை வியாபாரிகளிடம் கோவையில் 32 லட்சம் மதிப்பு தங்கம் மோசடி - வாலிபர்கள் மீது வழக்கு !!!

SHARE

 கேரளா நகை வியாபாரிகளிடம் கோவையில் 32 லட்சம் மதிப்பு தங்கம் மோசடி - வாலிபர்கள் மீது வழக்கு !!!

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு ( 62). இவர் திருச்சூரில் தங்கம் நகை தொழில் செய்து வருகிறார். 

இவருடன் சந்தோஷ் என்பவரும் பங்குதாரராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜு 335 .860 கிராம் பழைய தங்க நகையை  ஆர்.எஸ் புரத்திற்கு சென்று மாற்றுவதற்காக வந்து உள்ளார்.

அப்போது அவருடன் சந்தோஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் வந்துள்ளனர். ரேஸ் கோர்ஸ் அருகே உள்ள டி.பி. ரோடு, மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் அருகே அவர்கள் சென்ற போது காரில் வந்த கோவையைச் சேர்ந்த ரவீந்திரன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் தங்களை தங்க நகை வியாபாரம் செய்பவர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு உள்ளனர். அப்போது ராஜவிடம் பழைய நகைகளை தங்களிடம் கொடுத்தால் அதற்கு புதிய நகைகளை தருவதாக கூறி உள்ளனர்.

இதனால் ராஜி அவர்களிடம் தங்க நகைகளை கொடுத்து உள்ளார். அப்போது அவர்கள் நகைகளை பரிசோதிக்க வேண்டும் என்று கூறி எடுத்துச் சென்று உள்ளனர். 

ஆனால் அதன் பிறகு தங்க நகைகளை திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதோடு தங்க நகைக்கான பணத்தையும் அவர்கள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.  இது தொடர்பாக ராஜூ பலமுறை ஏற்றும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அந்த நகைகளை மதிப்பு 32 லட்சம் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ராஜு

கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரவீந்திரன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: