முதலமைச்சர் விஜய் உத்தரவின் பெயரில் கோவையில் ஒரே நாளில் நான்கு டாஸ்மார்க் கடைகள் மூடல் - மேலும் 65 கடைகள் 15 நாட்களுக்குள் அடக்க நடவடிக்கை !!!
முதலமைச்சர் விஜய் உத்தரவின் பெயரில் கோவையில் ஒரே நாளில் நான்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. மேலும் 65 கடைகள் 15 நாட்களுக்குள் அடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் வழிபாட்டுத் தலங்கள் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூட முதலமைச்சர் விஜய் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து அந்த டாஸ்மார்க் கடைகளை மூடும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மூடப்பட உள்ள டாஸ்மார்க் கடைகளின் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இங்கு கோவை தெற்கு, வடக்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி தெற்கு பகுதியில் 128 டாஸ்மார்க் கடைகளும், வடக்கு பகுதியில் 156 டாஸ்மாக் கடைகளும் என மொத்தம் 254 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
தற்பொழுது முதலமைச்சர் விஜய் உத்தரவைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கோவை வடக்கு பகுதியில் 48 டாஸ்மார்க் கடைகள், கோவை தெற்கு பகுதியில் 21 டாஸ்மார்க் கடைகள் என மொத்தம் 69 டாஸ்மாக் கடைகள் பள்ளிகள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்பட்டு வருவது தெரியவந்தது. இந்த 69 டாஸ்மார்க் கடைகளையும் மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு டாஸ்மார்க் கடை உட்பட நான்கு கடைகள் மூடப்பட்டன. மீதமுள்ள 65 கடைகளையும் அடுத்த 15 நாட்களுக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்: