வெள்ளி, 1 மே, 2026

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை இனி நீதிபதி சசிகலா விசாரிக்க மாட்டார் !!!

SHARE

 விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை இனி நீதிபதி சசிகலா விசாரிக்க மாட்டார் !!!

நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலாவை பணியிட மாற்றம் செய்து உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு, சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது.

இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி சசிகலா, நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஜூன் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், சுமார் 40 மாவட்ட நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு வெளியட்டு உள்ளது.

அதில், நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா மாற்றப்பட்டு, ஏற்கனவே நீதிபதியாக இருந்த டி.சுஜாதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் மீது சங்கீதா தொடர்ந்த வழக்கில், “கடந்த 1999-ஆம் ஆண்டு நடிகர் விஜய் உடன் திருமணம் நடைபெற்றது. பின்னர், குடும்பத்துடன் 26 ஆண்டுகளாக நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தோம்.

ஆரம்ப காலத்தில் அன்பாகவும், அக்கரையாகவும் விஜய் நடந்து கொண்டார். மேலும், அடிக்கடி வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் செல்லும் போது, லண்டனில் உள்ள எனது குடும்பத்தையும் வருடத்துக்கு ஒருமுறை சந்தித்து வந்தோம். இருவருக்கும் இடையே சிறு பிரச்சினைகள் இருந்தாலும் சுமூகமாக பேசி ஒன்றாகவே வசித்து வந்தோம்.

ஆனால், 2021-ல் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தேன். இதனால் மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. நடிகையுடனான தொடர்பு குறித்து கேட்ட போது அதை துண்டித்து விடுவதாக உறுதி அளித்த விஜய், நடிகையுடன் உறவை தொடர்ந்ததால் இருவருக்கும் இடையேயான பிரச்சினை அதிகரித்தது.

இந்த பிரச்சினைக்கு பின்னர் தன்னை புறக்கணிக்கும் வகையில், தன்னிடம் இருந்து வேறு வீட்டில் தனியாக பிரிந்து விஜய் வசித்து வருகிறார். குழந்தைகளையும் கவனிப்பது கிடையாது. விளம்பரத்தை தவிர்க்க நடிகையின் கண்ணியத்தை காக்கவும் குறிப்பிட்ட நடிகையின் பெயரை வெளியிட விரும்பவில்லை” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், விஜய் மீது சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கில் ஜூன் 15-ஆம் தேதி இருவரும் புதிய நீதிபதி டி.சுஜாதா முன்பு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: