ஆனைமலை அருகே பயங்கரம் ; கள்ளக் காதல் விவகாரத்தில் தொழிலாளி அடித்துக் கொலை - வாலிபர் கைது !!!
ஆனைமலை அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்ட ஆனைமலை அருகே கோட்டூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித் தொழிலாளி, இவரது மகன் தமிழ்செல்வன் இதே போல அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் இவரது மனைவி பிரியா இதற்கிடையே தமிழ்செல்வனுக்கும் பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் யாருக்கும் தெரியாமல் தமிழ்ச்செல்வன், பிரியாவை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று விட்டார்.
இதை அறிந்து பிரியாவின் கணவன் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து ஆத்திரத்தில் ஆனந்தன் தமிழ்ச்செல்வனின் தந்தை பாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மது போதையில் இருந்த ஆனந்தன். நெல்லித்துறை சாலையில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரிடம் மீண்டும் தகராறு ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், பாலகிருஷ்ணனை அடித்து கீழே தள்ளி விட்டு சென்றார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாலகிருஷ்ணனின் தலையில் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து பாலகிருஷ்ணன் பலத்த காயத்துடன் தனது மூத்த மகள் தமிழ்ச்செல்வி வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வி உடனடியாக தந்தையை ஆட்டோ மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் கள்ளக் காதல் விவகாரத்தில் பாலகிருஷ்ணனை அடித்து கொன்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் ஆனந்த கைது செய்து வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையான பாலகிருஷ்ணனின் உடல் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: