தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய் !!!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.
தமிழ்நாட்டில் 17 வது சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று (மே 11) நடைபெற்றது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டர். முதல் நாள் சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை, தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்றார். தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் விஜய் பொன்னாடை போர்த்தினார். தி.மு.க தலைவர் ஸ்டாலினும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இருவரும் சில நிமிடங்கள் சந்தித்து பேசிய நிலையில் முதலமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டார்.
https://x.com/i/status/2053789447058309161
இதனை அடுத்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை முதலமைச்சர் விஜய் சந்திக்க சென்றார். மேலும், ஆட்சி அமைக்க ஆதரவளித்த வி.சி.க தலைவர் திருமாவளவனை நாளை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் உடனான சந்திப்பு தொடர்பாக தனது சமூக வலைதளபக்கத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்பு நிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்" என பதிவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் மே 4-ம் தேதி வெளியான நிலையில், 108 இடங்களில் வென்று த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் த.வெ.க தலைவர் விஜய் ஆளுநரிடன் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வராக தவெ.க தலைவர் விஜய் பதவியேற்ரார். அவருடன் 9 அமைச்சர்களுக்கு பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து 17 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 9.30-க்கு தொடங்கியது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். நாளை (மே 12) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது.
அதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் தனது அரசின் மீதான பெரும்பான்மையை முதலமைச்சர் விஜய் நிரூப்பிக்க உள்ளார்.

0 கருத்துகள்: