சனி, 28 பிப்ரவரி, 2026

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம் !!!

SHARE

 மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம் !!!


மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதை அடுத்து இஸ்ரேல் தமது வான்வெளியைப் பொது விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த தடை விதித்து உள்ளது. இதனை அடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.

ஏர் இந்தியா, இண்டிகோ உள்பட முக்கிய விமான சேவைகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படவில்லை.

துருக்கிஷ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ், ஐபீரியா எக்ஸ்பிரஸ், ஜெர்மனியின் லுஃப்தான்ஸா, ஹங்கேரியின் விஸ் ஏர், ஃப்லை துபை, ஓமன் ஏர், டச்சு நாட்டின் கேஎல்எம் உள்பட முக்கிய விமான சேவைகள் பல பாதிக்கப்பட்டு உள்ளன.

விமான சேவை குறித்த அண்மைத் தகவல்களை அந்தந்த விமான நிறுவனங்களின் இணைய வலைதளங்களிலும் சமூக ஊடலகப் பக்கங்களிலும் பார்த்து பயணிகள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: