திங்கள், 16 மார்ச், 2026

கோவையில் மின்சார கம்பியில் அடிபட்டு 3 வயது பெண் மயில் உயிரிழப்பு !!!

SHARE

 கோவையில் மின்சார கம்பியில் அடிபட்டு 3 வயது பெண் மயில் உயிரிழப்பு !!!

கோவை, துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மின்சார கம்பியில் அடிபட்டு சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் மயில் உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்காக கோவை வனத் துறையினர் உயிரிழந்த மயிலை எடுத்துச் சென்றனர்.

கோவை, துடியலூர், கணுவாய் சாலையில் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சாலையை கடக்க பறந்து வந்த பெண் மயில் ஒன்று அவ்வழியாக சென்ற மின்சார கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி சாலையில் விழுந்து உள்ளது.

இதைப் பார்த்த அவ்வழியாக வந்த ராமலிங்கம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மயிலை மீட்டு தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்தார். ஆனால் சிறிது நேரத்தில் மயில் பரிதாபமாக இறந்தது.

இதை அடுத்து கோவை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் ராமலிங்கம் மயிலை ஒப்படைத்தார். மயிலை ஆய்வு செய்த வனத் துறையினர் அது பெண் மயில் எனவும் அதற்கு சுமார் 3 வயது இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

 இதை அடுத்து இறப்பிற்கான காரணம் அறிய பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: