திங்கள், 16 மார்ச், 2026

கோவை, உக்கடம் புல்லுகாடு பகுதி தி.மு.க செயலாளர் அமானுள்ளா டோக்கனை அபேஸ் - பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு !!!

SHARE

 கோவை, உக்கடம் புல்லுகாடு பகுதி தி.மு.க செயலாளர் அமானுள்ளா டோக்கனை அபேஸ் - பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு !!!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க வினர் தற்போதே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெல்லப்போவது இல்லை என்பதை புரிந்து கொண்ட தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க தலைமையில் இருந்து இரவு நேரங்களில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்க அளிக்கப்பட்ட டோக்கன்களை மொத்தமாக அபேஸ் செய்து உள்ளனர்.

இதனால் மேலும் தி.மு.க நிர்வாகிகளின் வேண்டிய நபர்களுக்கு மட்டும் வழங்கி உள்ளதாக, கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதி மக்கள் தி.மு.க நிர்வாகிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் சில பெண்கள் ஆதங்கத்துடன் தி.மு.க விற்கு எதிராக கோசங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு கூடியது.

 தி.மு.க வின் தோல்வி உறுதியாகி விட்டதால் தி.மு.க நிர்வாகிகள் கிடைப்பதை சுருட்டும் வேளையில் ஈடுபட்டு உள்ளதாகவும், அதை தான் அந்த பகுதி தி.மு.க செயலாளர் அமானுல்லாவும் செய்து உள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: