செவ்வாய், 17 மார்ச், 2026

கோவை எல் அண்ட் டி பைபாஸில் கோர விபத்து : கேரளா லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி குழந்தை உட்பட 3 பேர் படுகாயம் !!!

SHARE

 கோவை எல் அண்ட் டி பைபாஸில் கோர விபத்து : கேரளா லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி குழந்தை உட்பட 3 பேர் படுகாயம் !!!

கோவை எல் அண்ட் டி (L&T) பைபாஸ் சாலையில் கேரளா பதிவு எண் கொண்ட லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தை என மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த அவர்களைப் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை, மதுக்கரை அருகே உள்ள எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் ஒரு குடும்பத்தினர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கேரளா மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. 

இந்த மோதலில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி மற்றும் குழந்தை ஆகிய மூவரும் சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர்.

விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மதுக்கரை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள், உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கேரளா லாரி ஓட்டுநரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: