பாலியல் குற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் குற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு...

 கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் காவல் ஆய்வாளரை தாக்கி தப்ப முயன்ற போது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.

கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 12-ம் தேதி இரவு சிறுமி தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சந்தோஷ் (24), தவசி (28) ஆகிய இருவரும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளை தவசி மறைத்து வைத்திருந்த இடத்திற்கு, அதை கைப்பற்றுவதற்காக காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அவரை இன்று மாலை அழைத்துச் சென்றனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற தவசியை, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். பலமுறை எச்சரித்தும் தவசி மீண்டும் அரிவாளால் தாக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்ட உடனடி ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தவசியின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவர் மீதும் சட்டப்படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 "14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை" ; தலைமறைவான இருவர் கைது - கோவை காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

"14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை" ; தலைமறைவான இருவர் கைது - கோவை காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தற்காப்பிற்காகக் காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

 கோவை மாநகரில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர், மறைத்து வைத்து இருந்த அரிவாளை மீட்க அழைத்துச் சென்ற போது பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கித் தப்பியோட முயன்றதால், காவல்துறையினர் அவரைத் தற்காப்பிற்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரம், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (12.09.2026) இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகாரளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

​விசாரணையில், சந்தோஷ் (24) மற்றும் தவசி (28) ஆகிய இருவர் சேர்ந்து அச்சிறுமியைக் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

 இதை அடுத்து, தலைமறைவாக இருந்த சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

 பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்து இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதாக எதிரி தவசி தெரிவித்து உள்ளார். அதன் பேரில், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான காவல் குழுவினர், தவசியை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

​அப்போது, அங்கு மறைத்து வைத்து இருந்த அரிவாளைத் திடீரெனக் கையில் எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியைப் பயங்கரமாக வெட்டினார். இதில் ஆய்வாளரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆய்வாளரை வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்ற தவசியைப் பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் உடனடியாக எச்செரித்தனர். எனினும், எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அரிவாளுடன் காவல் அதிகாரிகளைத் தாக்க முயன்றதால், காவல் அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டுத் தற்காப்பு நடவடிக்கையாக தவசியின் இடது காலில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார்.

​துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளி தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

​கைது செய்யப்பட்ட சந்தோஷ் மற்றும் தவசி மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யக் கோவை மாநகரக் காவல்துறை முன்னுரிமை அளித்து வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

 "நாய்கள் செய்த அதிசயம்" ; நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞர் கைதான அதிர்ச்சி சம்பவம் !

"நாய்கள் செய்த அதிசயம்" ; நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞர் கைதான அதிர்ச்சி சம்பவம் !

பெட்டிக்கடை தீ வைப்பு வழக்கை விசாரிக்கச் சென்ற போது சிக்கிய சி.சி.டி.வி: துடியலூரில் நள்ளிரவில் பரபரப்பு!

​ கோவை, அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற கஞ்சா போதை ஆசாமியிடம் இருந்து, அங்கு இருந்த வளர்ப்பு நாய்கள் சண்டையிட்டுக் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான மற்றும் அதிர்ச்சிகரமான சி.சி.டி.வி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, அருகே பெட்டிக்கடை ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாகத் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றிக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

​அப்போது சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி அளிக்கும் வேறொரு கொடூரச் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இன்று அதிகாலை 2 மணி அளவில், சாலையோரமாக அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்போது, கஞ்சா மற்றும் மது போதையில் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவரை அங்கு இருந்த 2 நாய்கள் இடை விடாது குரைத்துத் தொடர்ந்து சென்று உள்ளன.

​அப்போது அந்த பெண்ணிடம் அந்த இளைஞர், "இது உங்க நாயா பாரு... பின்னாடியே வந்துட்டு இருக்கு!" எனக் கேட்டு உள்ளார். அதற்கு அந்தப் பெண், "கல்லை எடுத்து அடிங்க... நாய் ஓடிவிடும், இதுகூட தெரியாதா?" எனக் கூறி உள்ளார்.

 இளைஞரும் கல்லை எடுத்து எறியவே நாய்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் அவரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே நின்றன.

​அந்தச் சமயத்தில், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த இளைஞர், சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திடீரென மானபங்கம் செய்ய முயன்று உள்ளார்.

ஆபத்தை உணர்ந்த அப்பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிடவே, உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட நாய்கள் பாய்ந்து வந்து அந்த இளைஞரைத் தாக்கத் தொடங்கின. குரைத்துக் கொண்டே இளைஞரின் கால்களைக் கடித்து இழுத்துப் பெண்ணை நெருங்க விடாமல் தடுத்தன.

​நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளைஞர், பெண்ணை விட்டு விட்டு அங்கு இருந்து ஓட்டம் பிடித்தார்.

 விடாத நாய்களும் அந்த இளைஞரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்றன.

மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட இளைஞரிடம் இருந்து நன்றி உள்ள நாய்கள் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய இந்த நெகிழ்ச்சி காட்சி சி.சி.டி.வி யில் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

​சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உடனடியாக களமிறங்கிய காவல்துறையினர், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட இளைஞரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 போதை ஆசாமி இடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நாய்கள் போராடிக் காப்பாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

கஞ்சா விற்றதை வெளியே சொன்னதால் தொழிலாளியை கொலை செய்தோம் - கைதான இரண்டு பேர் வாக்குமூலம் !

கஞ்சா விற்றதை வெளியே சொன்னதால் தொழிலாளியை கொலை செய்தோம் - கைதான இரண்டு பேர் வாக்குமூலம் !

கோவையில் பள்ளி பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை - உதவியாளர் போக்சோவில் கைது!

கோவை, கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு பேருந்து மூலம் மாணவர்களை அழைத்து வருவது வழக்கம், ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என இரண்டு பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒரு பேருந்தில் குறிப்பிட்ட வழிதடத்தில் பணியாற்றும் உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக சில மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் பேருந்து உதவியாளர் தங்களிடம் பேட் டச் செய்வதாக தெரிவித்து உள்ளனர். 

இந்நிலையில் நேற்று காலை அரசு அருகே உள்ள ஒரு கிராமத்து பகுதிக்கு வந்த பள்ளி பேருந்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் சிறை பிடித்தனர். தகவல் அறிந்து நீலாம்பூர் போலீசார் உதவியாளர் சேவியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் பள்ளி சார்பில் யாரும் வராததால், மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது பேருந்து உதவியாளரால் பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி பேருந்து உதவியாளர் சேவியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
"பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ;  கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

"பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ; கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

 "பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ;  கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

 பள்ளி மாணவிகளிடம் கைவரிசை காட்டிய கிளீனரை மடக்கிப் பிடித்த மக்கள்!

​ கோவை, கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பேருந்தின் கிளீனர் ஒருவர், பள்ளிக்குச் செல்லும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக் கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

​இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி பேருந்தில் தினமும் பயணிக்கும் பள்ளிச் சிறுமி ஒருவரிடம், அந்தப் பேருந்தின் கிளீனர் தொடர்ந்து தவறான எண்ணத்துடன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தனது பெற்றோரிடம் அழுது கொண்டே விவரத்தைக் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், இன்று வழக்கம் போல வந்த அந்தத் தனியார் பள்ளி பேருந்தை அரசூர் பகுதியில் திடீரென வழிமறித்து நிறுத்தினர்.

​தொடர்ந்து, பள்ளிச் சிறுமியிடம் அசிங்கமாக நடந்துகொண்ட அந்தப் பேருந்து கிளீனரிடம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகள் கேட்டுப் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், ஆவேசத்தில் இருந்த பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர்.

​தொடர்ந்து, பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி பேருந்து கிளீனரைப் போலீஸார் உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இச்சம்பவம் கருமத்தம்பட்டி பகுதியில் தாய்மார்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.