திங்கள், 9 மார்ச், 2026

அரசு பள்ளிகளுக்கு விநியோகிக்க ஒப்பந்தம் பெற்று தருவதாக முட்டை வியாபாரியிடம் ரூபாய் 7.8 லட்சம் மோசடி - கோவையில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு !!!

SHARE

அரசு பள்ளிகளுக்கு விநியோகிக்க ஒப்பந்தம் பெற்று தருவதாக முட்டை வியாபாரியிடம் ரூபாய் 7.8 லட்சம் மோசடி - கோவையில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு !!!

அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்ய ஒப்பந்தம் பெற்று தருவதாக கூறி முட்டை வியாபாரியிடம் ரூபாய் 7.8 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை, ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் முட்டை வியாபாரி. இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்டீபன் என்பவர் அறிமுகமானார். அவர் பாஸ்கரனிடம் அரசு பள்ளிகளில் முட்டை விநியோகம் செய்ய சேலத்தில் உள்ள தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஒப்பந்தம் எடுத்து தருவதாக தெரிவித்து உள்ளார். அதற்கு பாஸ்கரன் சம்மதம் தெரிவித்து உள்ளார். இதை அடுத்து ஸ்டீபன் டெண்டர் தயாராகி விட்டதால், சேலம் வந்து பெற்றுக் கொள்ளுமாறு பாஸ்கரிடம் செல்போனில் கூறி உள்ளார்.

அதை நம்பிய பாஸ்கரன் சேலம் சென்றார். அங்கு டெண்டர் கிடைத்து விட்டதாக ஆவணங்களை காண்பித்து ரூபாய் 7,80,000 செலுத்த வேண்டும் என்று ஸ்டீபன் கூறி உள்ளார். 

இதனால் பாஸ்கரன் ரூபாய் ஐந்து லட்சத்தை ஸ்டீபனிடம் கொடுத்து உள்ளார். மீதி ரூபாய் 2,80,000 ஸ்டீபன் கூறிய வங்கி கணக்கிற்கு செலுத்த உள்ளார்.

இதை அடுத்து பாஸ்கரன் டெண்டர் ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சத்துணவு திட்ட அலுவலகத்திற்கு சென்று டெண்டர் குறித்து கேட்டு உள்ளார். அந்த ஆவணங்களை வாங்கி பார்த்து அரசு அலுவலர்கள் அது போலியான ஆவணம் என்றும் கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் ஸ்டீபனை தொடர்பு கொண்டு தனது பணத்தை திரும்பி தரும்படி கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணத்தை திரும்பி தராமல் ஏமாற்றி வந்தால் இது குறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீஸ்சார் ஸ்டீபன் அவரது கூட்டாளிகள் பிரின்ஸ், பிரின்ஸ் தெரசா ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: