நண்பரை அடித்துக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!
நண்பரைக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கேரள மாநிலம், சாலக்குடியைச் சேர்ந்தவர் பென்னி, இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு கோவை காந்திபுரம் - உப்பிலிபாளையம் பகுதியில் நடை பாதையில் தங்கி சமையல் வேலை மற்றும் சுமை தூக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜேந்திரன் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்கள். இதனால் அவர்கள் இரண்டு பேரும் அவ்வப் போது ஒன்றாக மது குடிப்பது வழக்கம், கடந்த 2023 ஆம் ஆண்டு ராஜேஷ் அவருடைய நண்பர்கள் மது குடித்து உள்ளனர். இதை அடுத்து மாலை ராஜேஷ் கோவை ஆடம்ஸ் வீதியில் ஒரு கடையில் அருகே பென்னியை சந்தித்து உள்ளார். அப்பொழுது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ராஜேஷ் பென்னியை தாக்கி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பென்னி அன்று இரவு ஆடம்ஸ் வீதியில் பெஞ்சில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்த ராஜேஷை மரக்கட்டையால் சாரா மாறியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ராஜேஷின் செல்போனை திருடிவிட்டு பென்னி தப்பி சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சிவக்குமார் குற்றம் சாட்டப்பட்ட பென்னிக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

0 கருத்துகள்: