வெள்ளி, 27 மார்ச், 2026

வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டு யானை கொன்ற விவசாயிக்கு ஐந்தாண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

SHARE

 வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டு யானை கொன்ற விவசாயிக்கு ஐந்தாண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டு யானையை கொன்ற விவசாயிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கிரிமலாம் வனப்பகுதியை ஒட்டி ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில் அவர் மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். அதற்குள் வன விலங்குகள் புகுந்து விடாமல் இருக்க இரும்பு வேலி அமைத்து இருந்தார். மேலும் தோட்டத்துக்குள் காட்டு யானை புகுவதை தடுக்க இரும்பு வேளையில் அவர் உயர் மின் அழுத்த மின்சாரம் இணைப்பு கொடுத்து உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு காட்டு யானை ஒன்று இரும்பு வேலையை துதிக்கையால் தொட்ட போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது.

இது குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து ரங்கராஜை கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்று விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டு யானையை கொன்ற ரங்கராஜுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர் சுரேந்திர மோகன் ஆஜராகி வாதாடினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: