புதன், 4 மார்ச், 2026

மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைவர் நிதின் நவீன் போட்டி !!!

SHARE

 மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைவர் நிதின் நவீன் போட்டி !!!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நவீன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் உள்பட பிகாா் (5 இடங்கள்), மகாராஷ்டிரம் (7 இடங்கள்), தெலங்கானா (2 இடங்கள்), சத்தீஸ்கா் (2 இடங்கள்), மேற்கு வங்கம் (5 இடங்கள்), அஸ்ஸாம் (3 இடங்கள்), ஹரியாணா (2 இடங்கள்), ஹிமாசல பிரதேசம் (ஓரிடம்) என மொத்தம் 37 இடங்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பிகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி, பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நவீன் மற்றும் ஷிவேஷ் குமார் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: