விஷமிகளின் சூழ்ச்சிகள் முறியடிப்பு ; திருத்தேர் பணிகளை நேரில் பார்வையிட்டு எஸ்.பி. வேலுமணி நெகிழ்ச்சி !!!
சில விஷமிகள் திருத்தேரை முடக்க சூழ்ச்சிகள் மேற்கொண்டதால், பக்தர்களிடையே தேவையில்லாத குழப்பமும், பதட்டமும் ஏற்பட்டது.ஆனால் இறைவனின் அருளால் நாளை திட்டமிட்டபடி திருத்தேர் உலா நடைபெற அனைத்து பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருவது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்று கோவையில் முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவையில் பலநூற்றாண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர்திருவிழா நாளை 29 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த நிலையில் திமுகவினர் இந்த தேரோட்டத்தை முடக்க பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டதால் கடந்த நான்கு நாட்களாக பக்தர்கள் கோவிலை முற்றுகையிட்டு பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை ஆதினம் ஆகியோர் திருத்தேர் வடம்பிடித்து இழுத்து அதிகாரிகள் முன்பு திருத்தேர் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் மக்களின் பதட்டத்தையும், பக்தர்களின் குழப்பத்தையும் போக்கும் விதமாக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேரூர் பட்டீஸ்சரர் ஆலயத்தில் தேரோட்டத்திற்கு தயாராகிவரும் திருத்தேரை பார்வையிட்டு அங்கு பணியில் ஈடுபட்டு வருபவர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அதை தொடர்ந்து கோவிலில் சிறப்பு தரிசனமும் மேற்கொண்டார்.
அதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.
கோவையில் வரலாற்று சிறபுமிக்க பேரூர் பட்டீஸ்வரார் கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் சில விஷமிகள் இந்த திருதேரை முடக்கும் நோக்கில் செயல்பட்டதால், பக்தர்களிடையே குழப்பமும், தேவையற்ற பதட்டமும் தொற்றி கொண்டது. இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் முன்னிலையில் திருத்தேரை பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், மற்றும், சிரவை அதீனம் ஆகியோர் வடம் பிடித்து திருத்தேர் சோதனை வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தனர். திருத்தேர் பட்டீஸ்வரரின் அருளாசியுடன் சிறப்பாக சென்ற நிலையில், மீண்டும் சில விஷமிகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நேற்று இரவு முதல் அதிகாலை வரை பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இறைவனின் அருளால் நாளை திட்டமிட்டபடி திருத்தேர் உலா நடைபெற அனைத்து பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருவது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அரசியல் செய்பவர்கள், ஜாதி, மதத்தை வைத்தும், ஆன்மிகத்தை முன்னிறுத்தியும் அரசியல் செய்யக்கூடாது. மக்களுக்கு தேவையானதை தேவையான நேரத்தில் செய்து கொடுத்து மக்களையும், நாட்டையும் செம்மை படுத்துவதில் அக்கரை செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

0 கருத்துகள்: