இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் !!!
சென்னை அருகே மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று நோன்பு துறந்தனர். பிறகு நடைபெற்ற தொழுகையிலும் விஜய் கலந்து கொண்டார்.
தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், 1000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நபர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


0 கருத்துகள்: