புதன், 18 மார்ச், 2026

பிரேக் பிடிக்காமல் தனியார் பேருந்து கடைக்குள் புகுந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது

SHARE

 பிரேக் பிடிக்காமல் தனியார் பேருந்து கடைக்குள் புகுந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது !!!

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் கீழே தனியார் பேருந்து ஒன்று அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடிக்காததால் அருகில் இருந்த எலக்ட்ரிக்கல் கடைக்குள் பேருந்து புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதில் கடையின் முன் பகுதி சேதம் அடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான காயங்கள் ஏற்படாமல் உயிர் தப்பினர்.அந்தப் பகுதி குறுகிய இடம் என்பதால் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் தகவல்.

அந்த பகுதியில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதனால் கனரக வாகனங்கள் மேம்பாலத்துக்கு திரும்ப முடியாமல் தினசரி அவதி அடைத்து வரும் நிலையில் தற்போது விபத்து ஏற்பட்ட வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: