தேர்தல் விதிமீறல்: வேலூர் தி.மு.க மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல் !!!
வணிக வளாகத்தில் இருந்து வெளியே வந்த மேயரின் காரை அங்கு பணியில் இருந்த தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
தேர்தல் விதிகளை மீறியதாக அ.தி.மு.க வினர் தெரிவித்த புகாரை தொடர்ந்து வேலூர் தி.மு.க மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
வேலூரில் இளைஞர்களை அழைத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி தி.மு.க-வைச் சேர்ந்த வேலூர் மேயர் சுஜாதா, விளையாட்டு உபகரணங்களை வழங்க முயன்று உள்ளார். இந்தத் தகவல் வெளியில் கசிந்தவுடன் மேயர் சுஜாதா அவசர அவசரமாக காரில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்: