கோவை 'பங்கஜா மில்' சாலையில் பயங்கர மோதல் : தி.மு.க-வின் 'கரூர் கும்பல்' அராஜகம் - அதிமுக பெண் நிர்வாகி கார் மறிப்பு !!!
கோயமுத்தூர் காரர்களுக்கும், கரூர் டீமுக்கும் இடையே வெடித்தது மல்லுக்கட்டு : அ.தி.மு.க - தி.மு.க மோதலால் போர்க் களமான கோவை !!!
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பங்கஜா மில் பின்புறம் உள்ள பெரியார் நகர் பகுதியில், அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து நடிகர் ரவி மரியா தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது, தி.மு.க மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் இடையே பயங்கரமான கைகலப்பு ஏற்பட்டது. தி.மு.க கவுன்சிலர் ஜெயப்பிரதாவின் கணவர் சீனிவாசன், முதல்வர் அறிவித்ததாகக் கூறி 8,000 ரூபாய் மதிப்பிலான 'கூப்பன்களை' வீடு, வீடாக விநியோகித்துக் கொண்டு இருந்ததை அ.தி.மு.க பெண் நிர்வாகி ரம்யா தடுத்து நிறுத்தி மோதல் ஏற்பட்டது.
அ.தி.மு.க நிர்வாகி ரம்யா, அந்தச் சட்டவிரோத கூப்பன்களைப் பறிக்க முயன்ற போது, கரூரில் இருந்து செந்தில் பாலாஜியின் தேர்தல் பணிகளுக்காக வந்து உள்ள தி.மு.க 'கரூர் டீம்' (Karur Team) அங்கு அதிரடியாகப் புகுந்தது. ரம்யாவைத் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய அந்தக் கும்பல், அவர் அங்கு இருந்து தனது காரில் புறப்பட்டுச் சென்ற போதும் விடாமல் பின் தொடர்ந்து பங்கஜா மில் சாலை, கே.ஆர் பேக்கரி அருகே காரை வழிமறித்த அந்தக் கும்பல், பெண் என்றும் பாராமல் அவரைத் தாக்க முயன்றது.
இந்தத் தகவல் அறிந்த அ.தி.மு.க-வினர் திரண்டு வந்து தி.மு.க வினர் நேருக்கு நேர் மோதிய நிலையில், அங்கு ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
"கோவையைச் சேர்ந்த தி.மு.க-வினர் மட்டும் விலகிச் செல்லுங்கள்" என அ.தி.மு.க-வினர் கறி, உள்ளூர் தி.மு.க தொண்டர்கள் கரூரில் இருந்து வந்தவர்களை விட்டு விட்டுப் பிரிந்து சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த 'கரூர் கும்பல்', அங்கு இருந்தவர்களுடன் மல்லுக்கட்டியது. இதில் அ.மு.மு.க-வைச் சேர்ந்த ஒருவரின் சட்டை கிழிக்கப்பட்டு, ரகளையில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க் களம் போல் மாறியது.
தகவலறிந்து வந்த போலீஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர். "வெளியூர் ஆட்கள் கோவையில் புகுந்து அராஜகம் செய்வதை அனுமதிக்க முடியாது" என அ.தி.மு.க-வினர் முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. உள்ளூர் தி.மு.க-வினருக்கும் கரூர் தி.மு.க வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: