’’கொரானாவை விட கொடியவர் செந்தில்பாலாஜ"; கோவையில் கொந்தளித்த இ.பி.எஸ் - கரூரைத் தொடர்ந்து கோவையைச் சுரண்ட வந்து உள்ளார் என சரமாரி தாக்குதல் !!!
அதிகாரிகளே ஜாக்கிரதை... ஆட்சி மாறியதும் விடமாட்டேன்" - ஈ.பி.எஸ் கடும் எச்சரிக்கை !!!
கோவையில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம் : "செந்தில் பாலாஜி கரூரைச் சுரண்டியவர், கோவையை விடமாட்டார் !!!
முன்பு இருந்த பழனிச்சாமி வேறு, இப்போது இருக்கும் பழனிச்சாமி வேறு" - கோவையில் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முழக்கம்...
கோவையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது;
கோவை மாவட்டத்திற்கு அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மேம்பாலங்கள் பில்லூர் குடிநீர் திட்டம் என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றினோம். மேற்கு புறவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை தான் தி.மு.க வினர் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தார்கள். அ.தி.மு.க ஆட்சியில் கட்டிய பாலத்தில் தான் மு க ஸ்டாலின் காரில் போகிறார்.
ஆனால் கடந்த 2021 - 2026 தி.மு.க ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து விவாதிக்க நான் நேரில் தயாராக இருக்கிறேன். தி.மு.க வினர் எங்கு மேடை போட்டாலும் வந்து விவாதிக்க தயாராக இருக்கிறேன் மு க ஸ்டாலின் முழு பூசணிக்காயை மறைக்க பார்க்கிறார்.
அ.தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்ததும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். அத்திக்கடவு அவிநாசி 2 திட்டம் நிறைவேற்றப்படும். மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்
அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். கரூரில் பொய் வழக்கு போடுகிறார்கள். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் இப்போது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் போட்டியெடுப்போம்.
தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது. முன்பு இருந்த பழனிச்சாமி வேறு இப்போது இருக்கும் பழனிச்சாமி வேறு.
நான் முதல் முறை முதலமைச்சராக பதவியேற்ற போது நிறைய சோதனைகள் இருந்தன வறட்சி, கொரோனா, புயல் என்று பல சோதனைகள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் சிறந்த ஆட்சி மூலம் மக்களுக்கு சிரமம் இல்லாமல் ஏராளமான பணிகளை செய்தோம்.
தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களையும் மக்களுக்காக செய்யவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது போதை கஞ்சா விற்பனை அதிகம் உள்ளது.
இந்த ஆட்சி தேவையா என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பில்டப் செய்கிறார் நாடகம் ஆடுகிறார். தொகுதி மறு சீரமைப்பு விஷயத்தில் டபுள் கேமா ஆடுகிறார். மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்று பயந்து திமுக பயப்படுகிறது
மற்றும் தொகுதி மறு சீரமைப்பு விஷயத்தில் தமிழ்நாடு உள்பட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது.
ஆனால் இதை எதிர்த்து வீடுகளில் தி.மு.க வினர் கருப்பு கொடி கட்டப்படும் என்றார்கள் நான் வரும் வழிகள் எல்லாம் பார்த்தேன் எந்த வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்படவில்லை
தொகுதி மறு சீரமைப்பு விஷயத்தில் நான் கூறிய கருத்துக்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி சிதம்பரம் என்னை விமர்சிக்கிறார்
சிதம்பரம் என்னைப்பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டிற்கு என்ன நிதி ஒதுக்கினார் என்ன திட்டம் கொடுத்தார் என்பதை கூற வேண்டும்.
ஓட்டு போட்ட மக்களைப் பற்றி சிந்திக்காதவர் சிதம்பரம் .
நாங்கள் டெல்லியில் காவிரி நதி நீர் பிரச்சனைக்காக 22 நாட்கள் அவையையே ஸ்தம்பிக்க வைத்தோம்.
ஆனால் இப்போது உள்ள 39 திமுக எம்பி களும் என்ன செய்கிறார்கள்.
அவர்கள் எதற்கு குரல் கொடுத்தார்கள் தமிழ்நாடு பழைய நிலையை சந்திக்கும் என்று கூறுகிறார் தி.மு.க கூறுவது தவறாகத் தான் இருக்கும்
தி.மு.க எம்பிக்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது தன் நீட் கொண்டு வரப்பட்டது. கொண்டு வருவதும் அவர்கள் தான் எதிர்ப்பதும் அவர்களாகத் தான் உள்ளனர் அவர்கள் நாடகமாடுகிறார்கள் தொகுதி மறுசீரமைப்பு பிறகு மு க ஸ்டாலின் நினைப்பதற்கு மேலாக நல்லது தான் நடக்கும். மக்களுக்கு மகிழ்ச்சி தான் கிடைக்கும். ஆனால் மு க ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி வராது.
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க விற்கு பொதுமக்கள் வெற்றியை தேடி தர வேண்டும். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் நிற்கும் தி.மு.க வேட்பாளர் பெயரை சொல்வதற்கு கூட எனக்கு விருப்பமில்லை. அவர் 10 ரூபாய்க்கு மதிப்பு கொடுத்தவர்.
2019 20 21 காலத்தில் கொடிய நோய் வந்தது. அந்த நோயைவிட இப்போது கொடிய வைரஸ் நோய் கோவைக்கு வந்து உள்ளது. கொரோனா நோய்க்கு மருந்து இருந்தது.
ஆனால் இப்போது வந்துள்ள கொடிய வைரஸுக்கு மருந்து கிடையாது. கரூரை அழித்து விட்டு இப்போது இங்கு வந்து உள்ளது. அவரை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்.
கடவுள் மனிதர்களுக்கு நல்லது செய்ய மூளையை கொடுத்து உள்ளார். ஆனால் அவருக்கு மட்டும் மூளையை தீய சிந்தனை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்.
அவரைப் பற்றி மு க ஸ்டாலின் இப்போது புகழ்ந்து பேசுகிறார் மேற்கு மண்டலத்தின் சிம்ம சொப்பனம் என்கிறார். கோடு போட்டால் ரோடு போடுவார் என்கிறார்.
ஆனால் கரூரில் அவர் தொகுதியில் ரோடு போடாமலேயே படம் எடுத்தவர். இதுகுறித்து சட்டசபையில் பேச.
கரூரில் இதற்கு முன்பு செந்தில் பாலாஜியை பற்றி அவர் எப்படி எல்லாம் பேசினார். ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்றெல்லாம் பேசியுள்ளார்.அதே போன்று சட்டசபையில் செந்தில் பாலாஜி இதற்கு முன்பு கருணாநிதி பற்றி என்னவெல்லாம் பேசினார். இதுவெல்லாம் ஆதாரம் இருக்கிறது. அது பதிவாகி உள்ளது.
ஆனால் இப்போது முக ஸ்டாலின் அவரைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார். தலைமைக்கு கப்பம் கட்டுகிறார். அதில் இருந்து ஒரு பங்கை எடுத்து வந்து இங்கு செலவு செய்கிறார் அவர்கள் முதல் போட்டு முதல் எழுத்து அரசியல் செய்யும் வியாபாரிகள் அவர்கள் .
அது கவர்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் அதன் பின் விளைவுகள் மோசமானதாக இருக்கும்
ஆனால் அ.தி.மு.க மக்களை நம்பி களத்தில் நிற்கிறது. செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் நிற்க வேண்டியது தானே
நான் எடப்பாடி தொகுதியில் 11 வயது முறையாக போட்டியிடுகிறேன். நான் அங்கு இதுவரை பிரச்சாரம் கூட செய்யவில்லை. என் தொகுதி மக்கள் என்னை குடும்பத்தில் ஒருவனாக பார்க்கிறார்கள்.
ஆனால் இங்கு போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கரூரை சுரண்டிவிட்டார் கோவை செழிப்பான தொகுதி கோவையில் முத்திரை விற்கும் தொழில் தொடங்கி விடுவார். சினிமாவில் ஒரு பாட்டு உண்டு.
விழித்துக் கொண்டவர் எல்லாம் பிழைத்து கொள்வார் என்று. எனவே கோவை தொகுதி மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
அவர் ஐந்து கட்சி அமாவாசை. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது டிக்கெட் மெஷின் ஊழல் செய்தவர். இப்போது புனித நீராடி தூயவர போல பேசுகிறார். கரூர் மக்களுக்கு பட்டை நாமம் போட்டவர் அரக்கனை விட கொடியவரார் அப்படிப்பட்ட மக்கள் நன்றாக புரிந்து கொண்டு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்
அதிமுக ஆட்சி அமைந்ததும் இங்கு நிற்கும் திமுக வேட்பாளர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது அதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்போம்
அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் அரசுக்கு விசுவாசம் என்று கூறி அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடக்கூடாது.
தவறாக செயல்படும் அதிகாரிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நடவடிக்கை எடுப்போம். யாராக இருந்தாலும் விடமாட்டேன்.
நான் இதற்கு முன்பு இப்படி பேசியது இல்லை. இங்குதான் இந்த இடத்தில் தான் இப்படி பேசுகிறேன். இங்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வீராதி வீரன் என்று பேசுகிறார்கள். ஆட்சி மாறியதும் அவர் எங்கு போய் ஓடிக் கொள்வார் என்று தெரியாது.
அவர் மீது அவ்வளவு வழக்குகள் உள்ளன. அவரையே அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியாது பிறகு எப்படி உங்களை காப்பாற்றுவார் எனவே மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
மக்களை பட்டியல் போட்டு அடைப்பதா மக்கள் வறுமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்ற கடாது ரெண்டு போடுவது ஆட்களை அடைத்து வைப்பது என்று செயல்படக்கூடாது 18 பேரை பினாமியாக சுழற்ச்சியாக நிறுத்தி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்
தி.மு.க ஆட்சியில் குப்பைக்கும் வரி போட்டார்கள் குடிநீர் வரி போட்டார்கள் வீட்டு வரி மின்கட்டண அனைத்தும் உயர்ந்து வட்டது. மக்கள் வாழ முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.. தீய சக்தி திமுகவை வேரோடு அளிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் அது குறித்து நடவடிக்கை எடுப்போம். கூறி உள்ளார். எனவே ஒவ்வொரு வாக்கு முக்கியம்
தி.மு.க வினர் நான் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை. அவர்கள் அரைத்த மாவை அரைக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சி பற்றி எந்த குறையும் கூற முடியாததால் தமிழ்நாடு அணி டெல்லி அணி என்று அழைத்த மாவையே அழைக்கிறார்கள்.
டெல்லியில் கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்தவுடன் அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அ.தி.மு.க தான் ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று அமித்ஷா தெளிவாக கூறி விட்டார். பிறகு ஏன் டெல்லிய நீ தமிழ் நாடு அணி என்று பேசுகிறீர்கள்.
அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் கோவை மாவட்டத்தில் உள்ள சிறு தொழில் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். அதே போன்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை மனு கொடுத்து உள்ளார்கள். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் அவர்களை நேரில் அழைத்து பேசி அவர்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.
அ.தி.மு.க ஆட்சியில் நாங்கள் இப்போது கூறிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் ரேஷன் கடையில் தரமான அரிசி பருப்பு வழங்கப்படும். எனவே கோவை மக்கள் அ.தி.மு.க வேட்பாளர்கள் பா.ஜ.க வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.


0 கருத்துகள்: