செவ்வாய், 14 ஏப்ரல், 2026

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருள்கள் கால்வாயில் கொட்டப்பட்டதா ? - அதிகாரிகள் விசாரணை !!!

SHARE

 கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருள்கள் கால்வாயில் கொட்டப்பட்டதா ? - அதிகாரிகள் விசாரணை !!!

கோவை மத்திய  சிறையில் 2,500 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர் இவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் பொருள்களை சரியாக வழங்காமல் பதுக்கி வைக்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வரும் தகவலை அறிந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பு உள்ள பொருட்களை அங்கு உள்ள கால்வாயில் கொட்டியதாகவும், உயர் அதிகாரிகள் உட்பட பலருக்கும் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது சிறை அதிகாரிகள் கைதிகளிடம் சட்ட விதிகளின்படி சரியாக நடந்து கொள்வதால், அதனை பொறுக்க முடியாதவர்கள் வேண்டுமென்றே பொய்யான தகவலை பரப்பி வருவதாக தெரிவித்தனர். இருந்தாலும் இந்த தகவல் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: