செவ்வாய், 14 ஏப்ரல், 2026

"ரோடு எப்படி இருக்குனு பாருங்க" - கோவையில் வாக்குச் சேகரிக்க வந்த செந்தில் பாலாஜியை 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கிய பெண் !!!

SHARE

 "ரோடு எப்படி இருக்குனு பாருங்க" - கோவையில் வாக்குச் சேகரிக்க வந்த செந்தில் பாலாஜியை 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கிய பெண் !!!

சாக்கடை நீரைச் சுட்டிக்காட்டி கேள்வி: பதில் சொல்ல முடியாமல் நகர்ந்த வேட்பாளர் ....

​ கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ராமநாதபுரம் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு இருந்த போது, அப்பகுதி பெண் ஒருவரின் சரமாரியான கேள்விகளால் நிலைதடுமாறிய சம்பவம் தேர்தல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

 "ஓட்டு கேட்க மட்டும் வர்றீங்களே... எங்க ஏரியா ரோடு எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க" என அந்தப் பெண் ஆவேசமாக முறையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை, ராமநாதபுரம் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்துக் கொண்டு இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது ஒரு வீட்டின் முன் நின்று இருந்த பெண்மணி, வேட்பாளரை இடைமறித்து அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாகப் பழுதாகிக் கிடக்கும் சாலைகள் மற்றும் துர்நாற்றம் வீசும் திறந்தவெளிச் சாக்கடைகளைச் சுட்டிக்காட்டினார். 

"தண்ணி எப்படி ?ரோட்டுல போகுதுன்னு பாருங்க... இதையெல்லாம் சரி பண்ணாம எப்படி ஓட்டு கேட்க வரீங்க ?" என அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

​எதிர்பாராத இந்த  கேள்வியால் அதிர்ச்சி அடைந்த செந்தில் பாலாஜி, அந்தப் பெண்ணுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் அங்கு இருந்து வேகவேகமாகச் சிரித்தபடி நகர முயன்றார். 

அப்போது ஒரு வினோதமான சம்பவமாக, வேட்பாளருடன் வந்து இருந்த மற்ற தி.மு.க நிர்வாகிகளே அந்தப் பெண்ணின் கேள்வியைக் கேட்டுச் சிரித்தது அங்கு இருந்தவர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

வேட்பாளரே திணறிக் கொண்டு இருக்கும் வேளையில், அவரது கட்சியினரே சிரித்தது அந்தச் வீடியோ 'எக்ஸ்' (X) மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், "மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் வாக்குச் சேகரிக்கச் சென்றால் இதுதான் நிலைமை" என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 

கோவையில் 'கரூர் டீம்' அராஜகம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் உள்ளூர் மக்களின் நேரடி எதிர்ப்புகளைச் செந்தில் பாலாஜி சந்தித்து வருவது தெற்கு தொகுதியின் தேர்தல் முடிவுகளில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: