வியாழன், 16 ஏப்ரல், 2026

SHARE

 கோவை வந்த சிதம்பரத்தை சந்திக்காமல் வேட்பாளர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு !!!

கோவை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்திக்கவில்லை.

கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதியும், கவுண்டம்பாளையம் தொகுதியில் சூரிய பிரகாஷ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் நேற்று பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தார். மாலை கோவை தெற்கு மற்றும் சூலூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இரவு ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார். ஆனால் கோவை காங்கிரஸ் போட்டியிடும் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவில்லை.

 தி.மு.க சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பு என்பதாலும் கோவையில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட்டு வழங்கவில்லை, என்பதாலும் அவர் பிரச்சாரம் செய்யவில்லை என்றனர் கட்சியினர்.

மறுபக்கம் கோவை வந்த சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் கூட மரியாதை நிமித்தமாக சந்திக்காமல் புறக்கணித்தனர். இதனால் அக்கட்சியின் உக்கட்சி விரிசல் மேலும் அதிகரித்து உள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில்

கோவை வந்த சிதம்பரத்தை விமான நிலையத்திலும் வரவேற்கவில்லை, ஹோட்டலில் மதியம் மூன்று மணி முதல் 4.30 மணி வரை தங்கி இருந்தும் சந்திக்கவில்லை, இரண்டு வேட்பாளர்களும் இளைஞர்கள், சிதம்பரம் மூத்த தலைவர் இந்த கூட்டணி உருவான காரணமே அவர் தான்.


வேட்பாளர்கள் அவரை சென்று சந்தித்து இருந்தால், பிரச்சனை முடிந்து இருக்கும், இது தவறான போக்கு சிதம்பரம் இன்று கோவையில் உள்ளார். அவர் தங்கி இருந்து புறப்படுவதற்குள் வேட்பாளர்கள் சந்தித்தால், வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் உள்ள சீனியர்கள் தேர்தல் பணி செய்ய வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால், பிரச்சனை தொடரவே வாய்ப்பு அதிகம் என்றனர்.


SHARE

Author: verified_user

0 கருத்துகள்: