வியாழன், 16 ஏப்ரல், 2026

தலைவருக்குக் கிடைத்துள்ள வரவேற்பைக் கண்டு மற்ற கட்சிகள் அச்சம்" - கோவையில் செங்கோட்டையன் உற்சாகம்!

SHARE

 "234 தொகுதிகளிலும் தவெக அமோக வெற்றி பெறும்!" - செங்கோட்டையன் அதிரடிப் பேட்டி!!!

"தலைவருக்குக் கிடைத்து உள்ள வரவேற்பைக் கண்டு மற்ற கட்சிகள் அச்சம்" - கோவையில் செங்கோட்டையன் உற்சாகம்!!!


​தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியின் நிர்வாகி செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் கூறுகையில், "தமிழக வரலாற்றிலேயே இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பு நமது தலைவருக்குக் கிடைத்துள்ளது. இதைப் பார்த்து மற்ற அரசியல் கட்சியினர் அச்சத்தில் உள்ளனர்" என்று தெரிவித்தார்.
​மேலும், வரவிருக்கும் தேர்தல்களில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெறுவது உறுதி என்றும், இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் அவர் உற்சாகத்துடன் கூறினார்.
​தலைவர் ஏன் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு, "மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய சரியான நேரத்தில் அவர் நிச்சயமாகச் செய்தியாளர்களைச் சந்திப்பார். மக்களை நேசிப்பவர்களுக்கே அவர் முக்கியத்துவம் அளிக்கிறார்" எனப் பதிலளித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: