"உங்கள் பிரார்த்தனையே என் மருந்து... விரைவில் வருவேன்" - மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன் உருக்கமான வீடியோ !!!
தொண்டர்களுக்கு நன்றி, மோடியின் கலந்துரையாடலுக்கு அழைப்பு: கோயம்புத்தூர் வடக்கு தேர்தல் களத்தில் நெகிழ்ச்சி !!!
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது தொண்டர்களுக்காகவும் தொகுதி மக்களுக்காகவும் ஒரு உருக்கமான வீடியோ செய்தியை வெளியிட்டு உள்ளார்.
அதில் கடந்த 11-ம் தேதி திடீர் 'ஹெல்த் இஸ்யூ' (Health Issue) காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது தேறி வரும் நிலையில் அவர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில், "அன்பு சகோதர சகோதரிகளே, உங்களது அன்பினாலும் பிரார்த்தனையாலும் நான் விரைவாகக் குணம் அடைந்து வருகிறேன்; இன்னும் ஓரிரு நாட்களில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன்" எனத் வீடியோ பகிர்ந்து உள்ளார்.
தான் இல்லாத நேரத்திலும், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தனது மகன் ஆகியோர் முன்னின்று நடத்தி வரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில், களப்பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள "எனது பூத் வலிமையான பூத்" என்ற கலந்துரையாடல் நிகழ்வை வெற்றிகரமாக்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தனது எக்ஸ் (X) தள பக்கத்தில், "உங்கள் நம்பிக்கையே என் மருந்து; விரைவில் குணமடைந்து உங்கள் இடையே வருவேன், மீண்டும் சந்திப்போம், வெற்றி கொண்டாடுவோம்" என 'கான்பிடன்ட்' (Confident) ஆகப் பதிவிட்டு உள்ளார்.
வேட்பாளர் மருத்துவமனையில் இருந்தாலும், அவரது இந்த வீடியோ செய்தி கோவை வடக்குத் தொகுதி பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் இடையே ஒரு புதிய உத்வேகத்தை, உற்சாகத்தை பாய்ச்சி உள்ளது.
இந்த வீடியோ பதிவு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் 'கெட் வெல் சூன்' (Get Well Soon) வாசகங்களுடன் அந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

0 கருத்துகள்: