கோவை வடக்குத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி : ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் - பரிசீலனைக்கு பின்பு வேட்பு மனு எற்பு!!!
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த முக்கிய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன் லால் சர்மா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க சார்பில் வடவள்ளி சந்திரசேகர் மற்றும் அ.ம.மு.க மாவட்டத் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். வானதி சீனிவாசனுக்குத் தங்களது ஆதரவை அளித்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வலிமையைப் பறைசாற்றும் விதமாக நடைபெறும் இந்த மனுத்தாக்கல் நிகழ்வில், முன்னதாக கோவை வடவள்ளி லாலி லாலி ரோட்டில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அருகே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தொண்டர்களுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாகச் சென்று தடாகம் சாலையில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாளிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம் எல் ஏ ...
இந்த ஊர்வலத்தின் போது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கோவை வடக்கு தொகுதியில் பா.ஜ.க-வின் செல்வாக்கையும், தேசிய அளவிலான கூட்டணியின் ஒருங்கிணைப்பையும் வாக்காளர்கள் மத்தியில் வலுவாகப் பதியவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய உயர்மட்டத் தலைவர்களின் வருகை, கோவை வடக்கு தொகுதியின் தேர்தல் களத்தை தேசிய அரசியலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உள்ளது.
தனது மனுத்தாக்கலைத் தொடர்ந்து, வேட்பாளர் வானதி சீனிவாசன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வேட்பு மனுக்கள் பரிசீலனையானது நடைபெற்றது அதில் பா.ஜ.க வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனின் வேட்பு மனு ஏற்கப்பட்டது ....

0 கருத்துகள்: