செவ்வாய், 7 ஏப்ரல், 2026

கோவை சிங்காநல்லூர் தேர்தல் களம்: சொத்து மதிப்பை உயர்த்திய அ.தி.மு.க எம்.எல்.ஏ. கே.ஆர். ஜெயராம் !!!

SHARE

கோவை சிங்காநல்லூர் தேர்தல் களம்: சொத்து மதிப்பை உயர்த்திய அ.தி.மு.க எம்.எல்.ஏ. கே.ஆர். ஜெயராம் !!!

​2021-ஐ விட ரூ.50 கோடி கூடுதல் -   பத்திரத்தில் அதிரடி தகவல!!!


 

கோவை, சிங்காநல்லூா் அ.தி.மு.க வின் சிட்டிங் எம் எல் ஏ கே.ஆா். ஜெயராம் சொத்து மதிப்பு ரூ.147 கோடி என பிராமான பத்திரத்தில் காட்டியுள்ளார். இது கடந்த சட்டமன்ற தேர்தலை விட 50 கோடி கூடுதலாக இந்த முறை சொத்து மதிப்பு காட்டியுள்ளார் . 


கோவை, சிங்காநல்லூா் தொகுதியில் அ.தி.மு.க சாா்பில் போட்டியிடும் கே.ஆா்.ஜெயராம் தனது பிரமாண பத்திரத்தில், தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளாா். கடந்த 2021 தோ்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டபோது தன்னிடம் ரூ.12.68 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.75.74 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகளும் 3 காா்களும் இருப்பதாகத் தெரிவித்து இருந்தாா்.

இந்தத் தோ்தலில் அதே தொகுதியில் போட்டியிடும் கே.ஆா்.ஜெயராம் தன்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 8 காா்களும், மொத்தம் ரூ.87.86 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.59.85 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.66.54 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளாா்.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: