தமிழகத்திற்கு செய்த பல ஆயிரம் கோடி திட்டங்களை பிரதமர் மோடி பட்டியலிட்ட பிறகும், ஸ்டாலினுக்குப் புரியவில்லையா, இல்லை புரியாதது போல் நடிக்கிறாரா ?" - வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி !!!
2 தேர்தலில் மு.க.ஸ்டாலின் சொன்ன பொய்யை நம்பிய தமிழக மக்கள் ; இந்த தேர்தலில் நம்ப தயாராக இல்லை... - மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் எம் எல் ஏ ஆவேச பதில் !!!
பா.ஜ.க உதயமான நாளில் மனுத் தாக்கல் செய்தது மகிழ்ச்சி ; ராஜஸ்தான் முதல்வர் மற்றும் அண்ணாமலை பங்கேற்பால் கோவை வடக்கு தொகுதிக்குக் கூடுதல் பலம் !!!
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பா.ஜ.க கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும் போது :-
பாரதிய ஜனதா கட்சி துவக்கப்பட்ட நாள் இன்று ஏப்ரல் 6 - 1970 துவக்கப்பட்ட நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்வது, விசேஷமானது என்றும், மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய எனக்கு வாழ்த்துக்களையும், அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் எப்படி ? ஒரு வெற்றி வாய்ப்போடு இருக்கிறது, என்பதை ராஜஸ்தான் முதல்வர் குறிப்பிட்டு உள்ளதாக கூறியவர், மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொண்டார். ராஜஸ்தானில் இருந்து முதல்வர் வேட்பு மனு தாக்கலுக்காக இங்கு வந்து இருப்பது தமிழ்நாடு பி.ஜே.பி க்கு முக்கியமான ஒன்று அதற்காக பா.ஜ.க சார்பில் எங்களது நன்றி என்றும் கூறியவர், அதேபோல் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் தலைவர்கள், செயலாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள் வந்தார்கள், பாரதிய ஜனதா கட்சியினுடைய அத்தனை நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சி அத்தனை நிர்வாகிகளுக்கும், நன்றிகளை தெரிவித்தவர். அதே போல் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்த வேட்பு மனு தாக்களின் போது உடன் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு இங்கு வருகை புரிந்ததற்கு நன்றி தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வாய்ப்பு நாளுக்கு நாள் பிரகாசமாக செல்வதாகவும், ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் பெண்கள் மீது நடத்தப்படுகின்ற பாலியல் வன்கொடுமைகளை பார்த்து பெண்கள் குறிப்பாக மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும், தங்கள் பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றாள், திரும்பவும் பத்திரமாக வர முடியுமா ? என்கின்ற சந்தேகமும், பயமும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளதாக கூறியவர், எல்லா இடங்களிலும் பரவி இருக்க கூடிய போதைப் பொருளின் தாக்கத்தினால், அடுத்து வரக் கூடிய இளைய சமுதாயத்தினர் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்ல, குடும்பத்தில் பாதுகாப்பாக இருக்க முடியுமா ? என்ற நிலைமையை இந்த திராவிட மாடல் தி.மு.க ஆட்சி உருவாக்கி உள்ளதாக கூறியவர், தி.மு.க வின் நிர்வாகிகள் எல்லா குற்றச்சாட்டுகளிலும், முன்னிலையில் இருப்பதாகவும், அவர்களோடு, அவர்களின் தூண்டுதல், ஆதரவோடு தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களோ ? சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருளும் அதிகமாக கொண்டு உள்ளதாக தெரிவித்தவர், இன்று கோயம்புத்தூர் பொறுத்த வரை கோவை தெற்கு தொகுதியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசாங்கத்தினுடைய உதவி இல்லாமல் இருந்தாலும் கூட நிறைவேற்றி உள்ளதாக கூறியவர்.
கோயமுத்தூர் பகுதியில் அண்ணன் எஸ்.பி.வேலுமணி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர தி.மு.க வேறு எதையும் உருப்படியாக கோவைக்கு செய்யவில்லை என குற்றம் சாட்டியவர்,
கோவையில் குறிப்பாக ஏழை மக்களுக்கு கிடைக்கக் கூடிய அனைவருக்கும் வீடு திட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு வீடும், கூட கட்டித் தரப்படவில்லை, ஆயுஷ்மான் பாரத் என்ற 5 லட்சம் மருத்துவ காப்பீடு 75 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படாமல் இழுத்தடித்துக் கொண்டு உள்ளதாக தெரிவித்தவர், விஸ்வகர்மா சமுதாயத்திற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தமிழகத்தில் முடக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசாங்கத்தின் உடைய மோதல் போக்கை கடைப்பிடித்ததால் 5 வருட காலம் தமிழகத்தினுடைய வளர்ச்சி என்பது பின் தங்கி உள்ளதாக கூறியவர், எதற்கெடுத்தாலும் மோடி அவர்களை எதிர்த்து, மத்திய அரசாங்கத்தை எதிர்த்து, திராவிட முன்னேற்ற கழகம் செய்த அத்தனை அரசியல் காரணமாக எத்தனையோ நல்ல திட்டங்கள் எல்லாம் தமிழகத்தினுடைய மக்கள் இழந்து உள்ளதாக தெரிவித்தவர்.
மத்தியில் இணக்கமாக சென்று 11 மருத்துவக் கல்லூரிகள், ராணுவ தளவாட மையங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் என்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அண்ணன் எடப்பாடி தலைமையில் பெற்றுக் கொண்டே இருந்தவர், ஆனால் தமிழகம் இன்று முழுவதுமாக முடங்கிப் போய் உள்ளதாக கூறியவர், திரும்பவும் தி.மு.க ஆட்சி வந்தால், தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையில் மக்கள் இருந்து கொண்டு உள்ளதாக கூறினார்.
இங்கு வடக்கு தொகுதியில் இருக்கின்ற மக்களுக்காக நான் வைக்கின்ற ஒரே ஒரு கோரிக்கை என்னவென்றால் என்ன ? செய்யப் போகிறோம் என்று வாக்கு கேட்கவில்லை, என்ன ? செய்து இருக்கிறோம் என்று நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வந்து உள்ளதாக கூறினார். ஆக ஐந்து வருட காலம் எங்களுடைய பணிகளை பார்த்து விட்டு, உங்களுடைய குரலாக ஒழிப்பதற்கு வாய்ப்பு தாருங்கள் என வடக்கு சட்டமன்றத்தினுடைய அத்தனை தொகுதி சகோதர, சகோதரிகளையும் கேட்டுக் கொண்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுதி பொறுப்பாளர் வடவள்ளி சந்திரசேகர் அவர்கள் முழுமையாக இந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளதாகவும், அவருக்கும் அவரோடு இணைந்து உள்ள கழக நிர்வாகிகளுக்கும், நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என முதல்வர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது குறித்தான கேள்விக்கு
தமிழகத்திற்கு என்னவென்றால் செய்து இருக்கிறோம் என்பதை பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழகம் வரும் பொழுது எல்லாம் பக்கம், பக்கமாக சொல்லுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு நான் சொல்வது குறைவாக நினைக்க கூடாது. புரிந்து கொள்ளக் கூடிய தன்மை இல்லையோ ? என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் பிரதமர் இங்கு வரும்பொழுது ஒவ்வொரு பாயிண்டாக சொல்லுகிறார். இத்தனை ஆயிரம் கோடி இதற்கு என்றும், புதிய விமான நிலையங்கள், புதிய ரயில்கள், புதிய துறைமுகங்கள், சாலைகள், மருத்துவமனைகள், கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை கூட மோடி ஜி தான் தமிழக அரசுக்கு கொடுத்ததாக கூறியவர். இவ்வளவு கொடுத்தது ஸ்டாலின் அவருக்கு தெரியவில்லையா ? என்ற கேள்வி எழுப்பியவர், அவர்களுடைய ஒரே அரசியல் தங்கள் நிர்வாக திறனற்ற இந்த அரசாங்கத்தினுடைய தோல்விகளை மறைப்பதற்காக மோடி அவர்கள் மீதும் பி.ஜே.பி மீதும் குற்றம் சொல்வது என்பது அவர்களுடைய வாடிக்கை என்றார். ஆரம்பத்தில் இரண்டு தேர்தல்களில் அவர்கள் சொன்ன பொய்களை எல்லாம் மக்கள் நம்பியதாகவும், ஆனால் இந்த தேர்தலில் தமிழக மக்கள் அவர்களது பொய்யை நம்ப தயாராக இல்லை என கூறினார்.

0 கருத்துகள்: