செவ்வாய், 7 ஏப்ரல், 2026

கோவை தொண்டாமுத்தூரில் வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு : "11-க்கு 11 வெற்றி உறுதி" - முழங்கினார் அண்ணாமலை !!!

SHARE

 கோவை தொண்டாமுத்தூரில் வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு : "11-க்கு 11 வெற்றி உறுதி" - முழங்கினார் அண்ணாமலை !!!

​"எடப்பாடியார் தலைமையில் கோவை மெட்ரோ திட்டம் உறுதி!" - பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அதிரடி வாக்குறுதி !!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் கழக தலைமை நிலைய செயலாளரும் ,கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளருமான எஸ்.பி. வேலுமணி அவர்கள் கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மாருதி பிரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, மாவட்ட கழக பொருளாளர் என்எஸ்.கருப்புசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்ணாமலை பேட்டி : கோவைக்கு மெட்ரோ வருவது உறுதி !!!

கட்சி பிரச்சாரம் செய்ய சொல்லியுள்ளனர். எங்கு தேவைப்படுகிறதோ அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன்.

கோவை மாவட்ட வளர்ச்சி நாயகன், பல்வேறு வளர்ச்சிக்கு காவலனாக இருக்கக்கூடிய எஸ்.பி.வேலுமணி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பேரூரில் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.

இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்துள்ளனர். அனைவரும் இவரது அன்பை பெற்றவர்கள்.

 மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தொண்டர்கள் கூறுவது போல ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எஸ்.பி.வேலுமணி உயரிய பொறுப்பில் அமர்த்தப்பட்ட பிறகு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவார்.   

கோவையை வெற்றியை வேலுமணி அண்ணன் மட்டும்தான் உறுதி செய்ய முடியும். 

கோவையில் 11 க்கு 11 தொகுதியை வெற்றி பெறுவார்

எடப்பாடியார் முதலமைச்சராக வந்த பிறகு மத்திய அரசிடம் இருந்து பெற்று மெட்ரோ திட்டத்தை கோவையில் செயல்படுத்திய தீர்வோம்.

பா.ஜ.க சார்பில் நாங்கள் உறுதியாக சொல்கிறோம். வரும் 9-ம் தேதி முதல் பிரச்சாரத்தை துவங்க உள்ளோம். இம்முறை வேட்பாளராக இல்லாததால் எனக்கு நேரம் உள்ளது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.


கட்சி பிரச்சாரம் செய்யுங்கள் என கூறியுள்ளது. நாளை வேட்பாளர் ஆக நிற்க சொன்னால் நாங்கள் நிற்போம். 


எல்லோரும் எல்லா இடத்திலும் இருக்க முடியாது.



SHARE

Author: verified_user

0 கருத்துகள்: