சனி, 11 ஏப்ரல், 2026

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி - ஸ்டாலின், நிர்மலா சீதாராமன் நலம் விசாரிப்பு !!!

SHARE

 தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி - ஸ்டாலின், நிர்மலா சீதாராமன் நலம் விசாரிப்பு !!!

 கோவை வடக்கு, சட்டமன்றத் தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ.க வேட்பாளர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உற்ள்ளார். 

தமிழக தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், பா.ஜ.க வின் முக்கிய 'வேட்பாளராக உள்ள எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக மாறி உள்ளது. 

கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்தத் தகவலை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வானதி சீனிவாசன் அவர்களை உடனடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

 அரசியல் களத்தில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் மேற்கொண்ட அரசியல் நாகரிகத்தின் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் முழுமையாகக் குணம் அடைந்து மீண்டும் மக்கள் பணிகளைத் தொடர வேண்டும் என முதலமைச்சர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் வானதி சீனிவாசனிடம் தொலைபேசி வாயிலாகப் பேசி நலம் விசாரித்தார்.

 கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் வானதி சீனிவாசன், கோவை வடக்கில் வெற்றியை நோக்கித் தீவிரமாக உழைத்து வந்த நிலையில், அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 

தற்போது மருத்துவமனையில் அவருக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது வானதி சீனிவாசனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் மீண்டும் தேர்தல் களத்திற்குத் திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள சூழலில், பா.ஜ.க தொண்டர்கள் அவர் விரைவில் களத்திற்கு வர வேண்டும் எனப் கோவில்களில் பூஜைகள் மற்றும் பிராத்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: