செவ்வாய், 7 ஏப்ரல், 2026

கோவையில் லாரி மோதி மின் கம்பம் சேதம் ; ஓட்டுநர் படுகாயம் - அப்பகுதி மக்களின் அச்சம் !!!

SHARE

 கோவையில் லாரி மோதி மின் கம்பம் சேதம் ; ஓட்டுநர் படுகாயம் - அப்பகுதி மக்களின் அச்சம் !!!

அதிவேகமாகச் செல்லும் லாரிகளால் தொடரும் அவலம் - காவல்துறை தீவிர விசாரணை !!!

கோவை, போத்தனூர் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 டிப்பர் லாரி ஒன்று திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

​விபத்து நடந்த நேரத்தில் அந்தச் சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள், நல்வாய்ப்பாகப் பெரிய விபத்து ஏதுமின்றி உயிர் தப்பினர். 

மின் கம்பத்தில் லாரி மோதியதால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்த போத்தனூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தைச் சீரமைத்ததுடன், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போத்தனூர் பகுதியில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிவேகமாகச் செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறிச் செல்லும் லாரிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற விபத்துகளைத் தவிர்க்கப் போக்குவரத்துக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: