செவ்வாய், 28 ஏப்ரல், 2026

கொடைக்கானல் மனோரஞ்சிதம் அணை பகுதியில் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் !!!

SHARE

 கொடைக்கானல் மனோரஞ்சிதம் அணை பகுதியில் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் !!!

கொடைக்கானல் மனோரஞ்​சிதம் அணை பகு​தி​யில் நடை ​ப​யிற்சி சென்ற முதல்​வர் ஸ்டாலின், அங்கு காத்திருந்த பொதுமக்களு​டன் கலந்துரை​யாடி​னார். முதல்​வரின் குடும்பத்தினர் ஏரி​யில் படகு சவாரி செய்​தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ ப​திவு முடிவடைந்​து உள்ள நிலை​யில் கொடைக்கானலில் 5 நாட்​கள் தங்கி ஓய்வெடுப்​ப​தற்​காக குடும்​பத்​துடன் முதல்​வர் ஸ்டா​லின் வந்​து உள்ளார்.

நேற்று முன்​தினம் காலை நட்​சத்​திர ஏரி பகுதி​யில் தனது குடும்பத்​தினருடன் முதல்வர் நடைப​யிற்சி மேற்​கொண்​டார். அதன் பிறகு விடு​திக்​குச் சென்ற அவர், நாள் முழுவதும் அறையிலேயே தங்கி ஓய்​வெடுத்​தார்.

இந்​நிலை​யில் நேற்று காலை கொடைக்​கானல் நகராட்சி மக்​களின் குடிநீர் ஆதா​ர​மாக இருக்கும், வனப்​பகுதியையொட்டி உள்ள மனோரஞ்​சிதம் அணை பகு​தி​யில் மூலிகை காற்றை சுவாசித்​த​படி, ஒரு மணி நேரம் முதல்வர் ஸ்டா​லின் நடைப​யிற்சி மேற்கொண்​டார்.

இதை அறிந்த பொதுமக்கள், சுற்​றுலா பயணி​கள் அவரை பார்ப்ப​தற்​காக அணையின் வெளிப் ​பகுதி​யில் ஆர்வமுடன் காத்​திருந்​தனர்.

நடை​ப​யிற்​சியை முடித்​து​விட்டு வெளியே வந்த முதல்​வரை பார்த்​ததும் பலரும் ஆர்​வ​முடன் அவர் அருகே சென்று ‘செல்ஃபி’ எடுத்​துக்​கொண்​டனர். அப்​போது, பொது​மக்​களு​டன் முதல்வர் கலந்துரையாடினார். பின்​னர், தங்​கும் விடுதிக்கு சென்​றார்.

இதற்​கிடையே, முதல்​வர் ஸ்டா​லினின் மனைவி துர்கா மற்​றும் குடும்​பத்​தினர் நட்​சத்​திர ஏரி​யில் 2 படகு​களில் சவாரி செய்​த​படி, இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்​தனர்.

படகு சவாரியை முடித்​து​விட்டு வெளியே வந்த துர்கா ஸ்டா​லினிடம் குழந்​தையை கையில் கொடுத்து தாய்​மார்​கள் புகைப்​படம் எடுத்​துக் கொண்​டனர். பலர் ஆர்வமுடன் ‘செல்ஃபி’ எடுத்​துக் கொண்​டனர்.

பின்​னர், கொடைக்கானலில் உள்ள பிரசித்தி பெற்ற மாரி​யம்​மன் கோயி​லில் துர்கா ஸ்டா​லின் தனது குடும்​பத்​தினருடன் சென்று அம்மனை தரிசனம் செய்​தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: