முதலமைச்சர் விஜய்க்கு இசட் + பாதுகாப்பு ; நவீன துப்பாக்கி, 55 பாதுகாப்புப் படை வீரர்கள் - 10 கமாண்டோக்கள் !!!
ஏற்கனவே விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 55 பாதுகாப்பு வீரர்கள் அடங்கிய Z+ பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்று உள்ள விஜய்க்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் அடங்கிய இசட் + (Z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து ஆதரவை பெற்று, பெரும்பான்மை பலத்தை நெருங்கியது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் நேற்று (மே 10) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த் உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் 17 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூடி உள்ள சட்டப்பேரவையில், வெற்றிபெற்ற த.வெ.க, திமுக மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ க்களுக்கு பதவிப் பிரமாணம் நடைபெற்று வருகிறது.
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக விஜய் பொறுப்பேற்க, அவரைத் தொடர்ந்து த.வெ.க அமைச்சர்களும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், முன்னாள் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதற்கு முன்னதாகவே, முதலமைச்சர் விஜய்க்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம், 55 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கவுள்ளனர். இந்த பாதுகாப்புக் குழுவில் என்.எஸ்.ஜி (தேசிய பாதுகாப்புப் படை) கமாண்டோக்களும் இடம்பெற்று உள்ளனர்.
இந்த பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவரும் MP 5 என்கிற அதிநவீன துப்பாக்கிகளை வைத்து இருப்பர். இதுதவிர, விஜய்யின் பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத (Bullet Proof) காரும், பைலட் வாகனமும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் வி.ஐ.பி க்களுக்கு வழங்கப்படுகிற உயரிய பாதுகாப்பு தான் Z+ பிரிவு பாதுகாப்பு. உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தலைவர்களுக்கும், முக்கிய அரசியல்வாதிகளுக்கும் இந்த பாதுகாப்பானது வழங்கப்படும். இந்த பிரிவில் 36 கமாண்டோக்கள், அதிநவீன ஆயுதங்கள், குண்டு துளைக்காத கார் ஆகியவை வழங்கப்படும்.
ஏற்கனவே விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 55 பாதுகாப்பு வீரர்கள் அடங்கிய Z+ பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: