திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய காவலர் கோவையில் கைது !!!
கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆகிய காவலர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவருடைய மகன் உதயகுமார். இவர் பில்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வந்தார். இவர் பேரூர் அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணை ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து உள்ளார். இதை அந்த பெண் நம்பினார். இதை அடுத்து அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் பலமுறை உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பமானார். இந்த தகவல் காவலர் உதயகுமாருக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து வடவள்ளி மற்றும் அவிநாசி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்து உள்ளார். இதற்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் காவலர் உதயக்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது, அந்த இளம் பெண்ணுக்கு தெரிய வந்தது. அந்த பெண், காவலரிடம் இப்படி என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயே என்று கூறி இருக்கிறார். இதை நீ வெளியே சொன்னால் நாம் இருவரும் தனிமையில் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன், கொலை செய்து விடுவேன் எனவும் காவலர் மிரட்டி உள்ளார். இருப்பினும் அந்த இளம் பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் காவலர் உதயகுமார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதை அடுத்து பேரூர் மகளிர் காவல் துறையினர் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்: