ஜோதிடத்தை இழிவாக பேசிய வி.சி.க வன்னியரசு எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜோதிடர்கள் புகார் !!!
தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ரிக்கி ராதன் வெற்றிவேல் பண்டிட் நியமிக்கப்பட்டதை விமர்சிப்பதாகக் கூறி ஜோதிடர்களையும்
ஜோதிடர்களையும் அவமதிக்கும் வகையில் பேசிய விசிக MLA வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்க தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் 50-க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் மனு அளித்தனர்
இது குறித்து தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தின் நிறுவனர் தலைவர் பிரசன்ன மணிகண்டன் கூறுகையில்:-
ஜோதிடர்களை இழிவுப்படுத்தியும் ஜோதிடம் மூடநம்பிக்கை என்று பேசிய எம்.எல்.ஏ வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்னியரசு பேசிய வார்த்தைகளை திரும்ப பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
ஜோதிடம் என்பது தொழில் அதனை தமிழக முதல்வரிடம் கூறியதற்கு அதன் நம்பிக்கை பெற்ற பின்னர் அதற்குப் பதவி வழங்கியுள்ளார் அதனை வன்னியரசு மூடநம்பிக்கை என்று கூறியது பத்து லட்சம் ஜோதிடர் குடும்பங்களுக்கு மனக் குமுறலுக்கு ஆளாக்கி இருக்கிறது.
ஜோதிடம் என்பது எங்கள் தொழில் எங்கள் உயிர் மூச்சு அதற்கு வன்னியரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

0 கருத்துகள்: