புதன், 13 மே, 2026

கோவையில் தேர்தலில் ஓட்டு போட வருவதாக கூறிய கணவர் திடீர் மாயம் - திருச்சி பெண் போலீசில் புகார் !!!

SHARE

கோவையில் தேர்தலில் ஓட்டு போட வருவதாக கூறிய கணவர் திடீர் மாயம் - திருச்சி பெண் போலீசில் புகார் !!!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வி ஸ்வ ம் பால சமுத்திரம், சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார் இவரது மனைவி ரஞ்சிதா (வயது 32)

கடந்த மார்ச் மாதம் கோவை வடவள்ளியில் பெயிண்டிங் வேலை பார்ப்பதற்காக விக்னேஷ் என்பவரிடம் ரமேஷ் கோவைக்கு வந்தார். 

அங்கு வடவள்ளியில் ஒரு கிராமத்தில் இருவரும் தங்கியிருந்து காந்தி என்பவருக்கு கீழ் வேலை பார்த்து வந்துள்ளனர். 

திருச்சியில் இருந்து அவ்வப்போது ரஞ்சிதா கணவர் ரமேஷ் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். கடைசியாக கடந்த மாதம் 14ஆம் தேதி ரஞ்சிதா ரமேஷை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.. 

அப்போது ரமேஷ் மனைவி ரஞ்சிதாவிடம்  23ஆம் தேதி தேர்தலில் ஓட்டு போட சொந்த ஊருக்கு வருவேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு 16ஆம் தேதி, ரஞ்சிதா செல்போனில் தொடர்பு கொண்ட போது அவரது செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா ரமேஷ் உடன் வேலை பார்த்த விக்னேஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பிறகு ரமேஷ் வேலை பார்த்த காந்தி என்பவரையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.. 

அப்போது காந்தி ரமேஷ் இடம் கடந்த மாதம் 17ஆம் தேதி 2100 ரூபாய் பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார் 

இதனால் அதிர்ச்சடைந்த ரஞ்சிதா கணவரை பல இடங்களில் தேடி உள்ளார். ஆனால் ரமேஷ் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ரஞ்சிதா வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் 

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் கதி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: