கோவையில் நடந்த பரிதாப சம்பவம் ; பெயிண்ட் அடித்த போது கயிறு அறுந்து தொழிலாளி கீழே விழுந்து உயிரிழப்பு !!!
சுந்தராபுரம் அருகே உள்ள உப்பிலியர் திட்டு குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 42). இவர் கட்டிடங்களுக்கு பெயிண்டிங் செய்யும் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வேலை நடந்து கொண்டு இருந்தது.
இதில் ராமன் உயரமான கட்டிடத்தில் கயிற்றை கட்டியபடி அமர்ந்து கட்டிடத்திற்கு பெயிண்டிங் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த கயிறு திடீரென்று அறுந்து விட்டது.
இதனால் மேலே இருந்து கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து ஹரிதாஸ் என்பவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துகள்: