வெள்ளி, 15 மே, 2026

புது துடைப்பம் கொஞ்சம் வேகமாகத் தான் பெருக்கும் - தமிழக அரசை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி !!!

SHARE

 புது துடைப்பம் கொஞ்சம் வேகமாகத் தான் பெருக்கும் - தமிழக அரசை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி !!! 

புது துடைப்பம் கொஞ்சம் வேகமாகத் தான் பெருக்கும் என்று தமிழக அரசை தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தார்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க ஆட்சி அமைத்து உள்ளது. 59 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தி.மு.க எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என தி.மு.க அரசு ஆராய தொடங்கி உள்ளது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்' நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதலமைச்சர் விஜய் அவகாசம் கேட்டு இருப்பது தொடர்பான கேள்வியை நிரூபர் எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவர், “இது முதல் அவகாசம் தான். இனி எல்லாவற்றுக்கும் விஜய் அவகாசம் தேட ஆரம்பிப்பார். ஏனென்றால், எதிர்பாராமல் முதலமைச்சர் ஆனவர் விஜய். அதனால், அவரிடம் இருந்து இதுபோன்ற பதில்கள் தான் வரும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியவுடனே அதற்கு முதலமைச்சர் அல்லது சபாநாயகர் உடனடியாக பதில் அளிக்க வேண்டும். அதுதான் சட்டசபையின் மரபு. அதை விட்டு விட்டு, யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை வீட்டிற்கு சென்று வெளியிடுகிறார்.

விஜயின் அரசு முன்னுக்குப் பின்னாக போய்க் கொண்டு இருக்கிறது. அவர் இன்னும் தெளிவு பெறவில்லை. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியவில்லை. முதலில் விஜய் தெளிவான முடிவுக்கு வர வேண்டும். அதன்பிறகு நாங்கள் பதில் சொல்கிறோம்” என தெரிவித்தார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் ஆதரவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய் தூய்மை என்று அரசியலுக்கு வந்தார். ஆரம்பமே தூய்மையற்ற நிலைக்கு சென்று விட்டது” என்றார்.

அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி குறித்த கேள்விக்கு, 

“அ.தி.மு.க வுடன் நாங்கள் கூட்டணி வைக்கப் போகிறோம் என்றால், பகிரங்கமாக அறிவித்து விட்டு வைக்கப் போகிறோம். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. கூட்டணி தொடர்பாக, தி.மு.க வுடன் அ.தி.மு.க வினர் பேசியது என்பது பொய். அதே போல, திருமாவளவனை முதலமைச்சராக்க திட்டமிட்டதாக பரவிய செய்தியும் வெறும் வதந்தி தான்.

சில பேருக்கு பதவி இல்லாமல் இருக்க முடியாது. அதில் முதல் நபர் சி.வி சண்முகம். தெளிவாக சொல்ல வேண்டுமானால், சில பேர் இறந்து விட்டால் இயற்கை எய்தினார் என்று தான் போடுவார்கள். ஆனால், சிலர் இறந்தால் சிவலோகப் பதவி அடைந்தார் என்று போடுவார்கள். அதனை விரும்பும் பட்டியலில் முதல் நபர் சி.வி.சண்முகம். அது போலத் தான் இதுவும்” என விமர்சித்தார்.

தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடியது தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு, “ஏன் தி.மு.க வும் ஆட்சிக்கு வந்தவுடன் 500-க்கும் மேற்பட்ட மது கடைகளை மூடியதே. அதுவும் செய்திகளில் வந்ததே. புதுத் துடைப்பம் கொஞ்சம் வேகமாகத் தான் பெருக்கும் என தவெக அரசை விமர்சித்த அவர், பதவியேற்ற 5 நாட்களாக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு, ஐந்து நாளாக அரசு செயல்படவில்லையே” என கிண்டலாக பதில் அளித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: