எபோலா வைரஸ் பரவல் - கோவை விமான நிலையத்தில் பயணிகளை தனிமை படுத்த முடிவு !!!
எபோலா வைரஸ் பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில் காய்ச்சல், சளியுடன் வரும் பயணிகளை தனிமைப்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்து இருக்கிறது.
ஆப்பிரிக்கா நாடுகளான உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. இது விலங்குகள் இடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றக்கூடிய வைரஸ் ஆகும். இந்த நோய் தாக்கம் குறித்து ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால், உயிரிழப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து உலக சுகாதாரம் நிறுவனம் எடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, இந்திய சுகாதாரத்துறை இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.
எபோலா வைரஸ் பரவல் எதிரொலியாக கோவை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எபோலா பாதிப்பு அதிகமாக உள்ள ஆப்பிரிக்கா நாடுகளான காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் இருந்து கோவைக்கு நேரடி விமான சேவை இல்லை, ஆனாலும் அங்கு இருந்து விமானங்களில் மும்பை வழியாகவோ அல்லது மும்பையில் இருந்து சென்னையில் வந்து அங்கு இருந்து கோவை வரும் பயணிகளை கண்காணித்து வருகிறார்கள். அந்த மருத்துவர் குழுவினர் விமான நிலையத்தில் நிரந்தரமாக உள்ள நவீன தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகிறார்கள். விமான பயணிகள் யாருக்காவது ? காய்ச்சல் தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்றவை இருந்தால் விமான ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: