கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதிய கார் ; நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசப்பட்ட ‘பதைபதைக்கும்’ சி.சி.டி.வி காட்சி - போலீசார் விசாரணை !!!
வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் ...
கோவை மாவட்டம் வால்பாறை தலைமை அஞ்சலகம் அருகே ஓட்டுனர் நாகராஜ் வயது 65 என்பவர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நடந்து சென்ற வேவர்லிஎஸ்டேட்டை சேர்ந்த கவிதா வயது 47 என்பவர் மீது மோதி தூக்கி வீசிச் சென்று எதிரே உள்ள தடுப்புச் சுவற்றில் மோதி நின்றது இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கவிதா வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவம் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ள நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

0 கருத்துகள்: