கோவையில் தனியார் வங்கி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி - டாக்ஸி டிரைவர் கைது !!!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோடு பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மில் கடந்த மே.25 ஆம் தேதி நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்று உள்ளார்.
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த போது சைரன் ஒலித்ததால் மர்ம நபர் அங்கு இருந்து தப்பி சென்று உள்ளார்.இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைத்து இருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
இதுகுறித்து அந்த ஏ.டி.எம் இயந்திரத்தை மேற்பார்வையிட்டு வரும் ஜான் ஸ்டெபக் ராஜன்(37) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.மேலும், ஏ.டி.எம் அறையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பெங்கால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த டாக்ஸி டிரைவர் தினேஷ்(29) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை நேற்று கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வரும் அண்ணாஜி ராவ் ரோட்டில் பட்டப்பகலில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: