வெள்ளி, 29 மே, 2026

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு: தப்பியோட முயன்று ‘கை, கால் உடைந்த’ காமுகன் மத்திய சிறையில் அடைப்பு!

SHARE

 கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு: தப்பியோட முயன்று ‘கை, கால் உடைந்த’ காமுகன் மத்திய சிறையில் அடைப்பு !!!


கோவை அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றம்: ஜூன் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அதிரடி உத்தரவு.

கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைதான கைதி மத்திய சிறையில் அடைப்பு - கை மற்றும் காலில் மாவுக்கட்டுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்து மத்திய சிறைக்கு மாற்றம்

 கோவை சூலூர் பகுதியில் கடந்த வாரம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கு..

 சூலூர் காவல் துறை கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். 

 போலீசாரிடமிருந்து கார்த்தி தப்பிக்க முயன்ற போது வலது கை, வலது கால் உடைந்தது. இதனைடுத்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சிறை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.  

 உடல் நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில் கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டார். 

 ஜூன் 5ஆம் தேதி வரை இருவரையும் நீதிமன்றக் காவலில் நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: