திங்கள், 11 மே, 2026

மீண்டும் உடைந்த அ.தி.மு.க ? எஸ்.பி.வேலுமணியை அ.தி.மு.க சட்டப்பேரவை குழு தலைவராக நியமிக்க சி.வி.சண்முகம் கடிதம் !!!

SHARE

 மீண்டும் உடைந்த அ.தி.மு.க ? எஸ்.பி.வேலுமணியை அ.தி.மு.க சட்டப்பேரவை குழு தலைவராக நியமிக்க சி.வி.சண்முகம் கடிதம் !!!

சட்டமன்ற தேர்தலில் வென்ற உறுப்பினர்கள் இன்று எம்.எல்.ஏ க்களாக பதவியேற்று கொண்டனர்.

தமிழ்நாட்டில் 233 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ க்கள் சட்டமன்றத்தில் இன்று பதவியேற்கின்றனர். முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியை ராஜிநாமா செய்ததால் 233 பேர் இன்று பதவியேற்கின்றனர்.

சட்டமன்றம் தொடங்கியதும் எம்.எல்.ஏ க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ கருப்பையா நேற்று பதவியேற்றார்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்களை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சட்டமன்றத்தில் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து விஜய் தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: