வெள்ளி, 22 மே, 2026

காய்க்கிற மரத்திற்குத்தான் கல்லடி விழும்’ ; ஆ.ராசாவின் பேச்சில் தூய்மையான நோக்கம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் !!!

SHARE

 காய்க்கிற மரத்திற்குத் தான் கல்லடி விழும்’ ; ஆ.ராசாவின் பேச்சில் தூய்மையான நோக்கம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் !!!

நிதித்துறையில் இருந்து வருவாய்த்துறைக்கு ‘ரூட்’ மாறியது ஏன் ? கோவையில் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த சீனியர் அமைச்சர் !!!

 கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் சமீபத்திய அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

தமிழக முதல்வர் தலைமையில் மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார். அனைத்து மக்களும் அனைத்து நலன்களையும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு தொடர்ந்து திட்டங்களை அறிவித்து வருவதாகவும், ஊழலற்ற ஆட்சி அமைப்பதே முதல்வரின் கனவாக இருப்பதாகவும் கூறினார். மேலும், அமைச்சர்கள் தங்கள் துறைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஆ. ராசா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “காய்கின்ற மரத்துக்கு கல்லடி விழும்” என்று குறிப்பிட்டு, அவர் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவிப்பதாகவும், மக்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறினார். அவரது கருத்துகள் தூய்மையான நோக்கத்தில் இல்லையெனவும் விமர்சித்தார்.

வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து, மக்களோடு நெருக்கமாக இருந்து நேரடியாக பணியாற்றும் நோக்கத்திலேயே இந்த மாற்றம் கோரியதாக அமைச்சர் விளக்கமளித்தார். நிதித்துறையில் இருந்தால் சென்னையில் மையப்படுத்தப்பட்ட பணியே அதிகம் இருக்கும் நிலையில், வருவாய்த்துறையின் மூலம் மக்களுக்கு நேரடியாக நலத்திட்டங்களை கொண்டு செல்ல முடியும் என்பதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

நிதிச் சுமை காரணமாக பதவி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுவது குறித்து அவர் மறுத்து, அனைத்து கருத்துகளுக்கும் பதில் அளிக்க முடியாது என்றும், தன்னுடைய விருப்பத்தை முதல்வரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

பெட்ரோல், டீசல் பயன்பாடு குறித்து பிரதமர் அளித்த அறிவுறுத்தல் தொடர்பான கேள்விக்கு, இது தேவையற்ற விவாதமாகும் என்றும், பொதுமக்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் விஷயங்களை பெரிதாக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

சில கேள்விகள் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும் நோக்கில் எழுப்பப்படுகின்றன என்றும், அதற்கு பதில் அளிக்க விருப்பமில்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: