சாட்சியங்களை அழிக்க ‘அவசர அவசரமாக’ உடல் எரிப்பா ? தாயை ஓரங்கட்டிய அதிகாரிகள் ; சூலூர் சிறுமி கொலையில் சித்தி எழுப்பிய உள்ள அதிர்ச்சி கேள்விகள் !!!
மறு உடற்கூறாய்வு செய்ய முடியாதபடி ஸ்கெட்ச் ? முதல்வர் விஜய் நேரடியாகத் தலையிடக் கோரி உறவினர்கள் கோவையில் பேட்டி !!!
சூலூர் சிறுமி மரணம்: தாய்க்குத் தெரியாமல் உடல் அவசரமாக எரிக்கப்பட்டதாக சித்தி பகீர் குற்றச்சாட்டு!!!
கோவை மாவட்டம் சூலூர் அருகே சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் தாய்க்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் குழந்தையின் உடல் அவசரமாக எரிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் சித்தி மற்றும் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சிறுமியின் சித்தி பேசும் போது,
"சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாங்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நேற்று உடற்கூறாய்வு (Post-mortem) நடைபெற்ற போது, அரசு அதிகாரிகள் சிறுமியின் தாய்க்குத் தெரியாமல், தந்தையிடம் மட்டும் தனியாகப் பேசி உடலை எடுத்துச் செல்ல வழிவகை செய்து உள்ளனர்.
சிறுமியின் தாயை இறுதிச்சடங்கில் பங்கேற்கக் கூட அனுமதிக்கவில்லை. தந்தையிடம் மற்றும் தாயிடம் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு, தந்தை வீட்டிற்குக்கூட உடலைக் கொண்டு செல்லாமல் அவசர அவசரமாக எரித்து உள்ளனர்.
நீதி கேட்டுப் போராடும் வேளையில் உடல் எரிக்கப்பட்டு உள்ளதால், இனி ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றால்கூட முடியாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. சிறுமியின் தந்தை, அவரது தாயை (மனைவியை) வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டதால், தற்போது அந்தத் தாய் தன்னந்தனியாக தவித்து வருகிறார்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரிடமிருந்து நேரடி உறுதிமொழி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் காத்திருந்தோம். ஆனால், அதற்குள்ளாக அரசு அதிகாரிகள் சிறுமியின் தந்தையை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பேசி, நாங்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே உடலை எரித்து முடித்துள்ளனர்.
தெரியாமல் உடலை எடுத்துச் சென்று எரித்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிவாரணத் தொகை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. கணவனால் கைவிடப்பட்டு, குழந்தையையும் பறிகொடுத்துவிட்டுத் தனியாக இருக்கும் சிறுமியின் தாய்க்கு அரசு சார்பில் உரிய வேலைவாய்ப்பை பெற்றுத் தர வேண்டும்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் தலையிட்டு இந்தத் தாய்க்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும்," என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

0 கருத்துகள்: