செவ்வாய், 2 ஜூன், 2026

வருங்கால முதல்வரே.. காசுக்கு விலை போக மாட்டோம்” ; கோவை ஏர்போர்ட்டில் இ.பி.எஸ்-ஸை சூழ்ந்த தொண்டர்கள் - முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத் துக்க நிகழ்வை முடித்துச் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..!

SHARE

 வருங்கால முதல்வரே.. காசுக்கு விலை போக மாட்டோம்” ; கோவை ஏர்போர்ட்டில் இ.பி.எஸ்-ஸை சூழ்ந்த தொண்டர்கள் - முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத் துக்க நிகழ்வை முடித்துச் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்..!

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வருவதற்கு முன்பாகவே, அங்கு திரண்டு இருந்த அக்கட்சியின் தொண்டர்கள் எழுப்பிய கோஷங்களால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க  முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, தனது நிகழ்வுகளை முடித்துக்கொண்டு கோவை விமான நிலையம் வழியாக சென்னை புறப்பட்டார். 

இதனையொட்டி, அவரை வரவேற்பதற்காக அ.தி.மு.க  தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கோவை விமான நிலையத்தின் முன்பாகக் குவிந்து இருந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்குள் வருவதற்கு முன்பாகவே, அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக உற்சாகத்துடன் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். 

குறிப்பாக, காசுக்கு விலை போக மாட்டோம்", நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி" என தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு குவிந்திருந்த தொண்டர்கள் ஆதரவாக முழக்கங்களை எழுப்பி ஆரவாரத்துடன் சென்னைக்கு வழி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது..

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: