திங்கள், 6 ஜூலை, 2026

புதுசு கண்ணா புதுசு... சொகுசு கார் கொடுத்தாலும் ‘கெத்து’ மாறாத ஐ.டி மாப்பிள்ளை: மாட்டு வண்டியில் மாஸாகச் சென்ற புதுமண தம்பதி!

SHARE

 புதுசு கண்ணா புதுசு... சொகுசு கார் கொடுத்தாலும் ‘கெத்து’ மாறாத ஐ.டி மாப்பிள்ளை: மாட்டு வண்டியில் மாஸாகச் சென்ற புதுமண தம்பதி!!!

கோவையில் நெகிழ்ச்சி; பாரம்பரிய முறைப்படி மணமகளை அழைத்துச் சென்ற பெங்களூரு டெக்கி !!!

 கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் புனிதா இவர்களுடைய முதல்வன் அருண் விக்ரம் பட்டதாரி இளைஞர் இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருளாளராக பணியாற்றி வருகிறார். கோவை வரதராஜபுரம் ஆர்.வி. எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் சுகந்தி இவர்களுடைய மகள் விகாஷினி இவரும் பட்டதாரி மணப்பெண் இவரும் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் நேற்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடை சூழ திருமணம் நடைபெற்றது. பின்னர் புதுமணத் தம்பதியினருக்கு பெண் வீட்டில் இருந்து புதிதாக தார் கார் வாங்கி கொடுத்துள்ளனர். இருந்த போதிலும் மணமகன் தனது பண்ணை வீட்டுக்கு தான் மூதாதையர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியிலேயே புதுமண பெண்ணை அமர வைத்து அவரே மாட்டு வண்டியை ஓட்டி தனது வீட்டுக்கு புறப்பட்டார்.இவர்களுடன் உறவினர்கள் காரில் அணிவகுத்து பின்னே சென்றனர். மாட்டு வண்டியில் வந்த புதுமண தம்பதியினரை அனைவரும் வியப்புடன் பார்த்து வாழ்த்தி சென்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: