ஞாயிறு, 19 ஜூலை, 2026

கோவையில் பச்சை பாம்பை முழுங்க முயன்ற சாரைப் பாம்பு : காட்சியை கண்டு உறைந்த குடியிருப்புவாசி - இரண்டு பாம்புகளையும் உயிருடன் மீட்ட பாம்பு பிடி வீரர் !!!

SHARE

 கோவையில் பச்சை பாம்பை முழுங்க முயன்ற சாரைப் பாம்பு : காட்சியை கண்டு உறைந்த குடியிருப்புவாசி - இரண்டு பாம்புகளையும் உயிருடன் மீட்ட பாம்பு பிடி வீரர் !!!

கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கொய்யா மரத்தில், பச்சை பாம்பு ஒன்றை சாரைப்பாம்பு உயிருடன் முழுங்கிக் கொண்டு இருந்த நெஞ்சை உலுக்கும் விசித்திரச் சம்பவம், அப்பகுதி குடியிருப்புவாசிகளை அதிர்ச்சி அடைந்தனர்.

 இன்று பிற்பகல் வேளையில் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் மரம் மற்றும் செடிகளைப் பராமரிக்கச் சென்ற குடும்பத்தினர், மரத்தின் கிளையில் அரங்கேறிக் கொண்டு இருந்த இந்த இயற்கை வேட்டையைக் கண்டு அலறி அடித்து ஓடிய நிலையில், உடனடியாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரரான அமீனுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் அமீன், சாரைப் பாம்பின் வாய்க்குள் பாதி உடல் சிக்கி இருந்த பச்சை பாம்பை எந்த விதக் காயமுமின்றி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

தனது பிரத்யேகத் திறமையால் சாரைப் பாம்பை லாவகமாகப் பிடித்து, அதன் பிடியில் சிக்கி மரணப் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்த பச்சை பாம்பை மிகச் சாதுரியமாக உயிருடன் மீட்டு எடுத்தார்.

 பிடிபட்ட இரண்டு பாம்புகளையும் பத்திரமாகப் பாதுகாப்புப் பைகளில் அடைத்துச் சென்ற அமீன், வனத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மதுக்கரை வனப் பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: