வியாழன், 23 ஜூலை, 2026

கோவையில் திரையரங்குகளில் அதிகாலை முதலே திருவிழா கோலம்; ஆட்டம் பாட்டத்துடன் நெகிழ்ச்சியில் மூழ்கிய இளைஞர்கள் !!!

SHARE

கோவையில் திரையரங்குகளில் அதிகாலை முதலே திருவிழா கோலம்; ஆட்டம் பாட்டத்துடன் நெகிழ்ச்சியில் மூழ்கிய இளைஞர்கள் !!!

 ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு – 15 அடி பேனர்கள், மேளதாளத்துடன் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..

 தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடிப்பில், இயக்குநர் வினோத் இயக்கி உள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு எதிர்பார்ப்புகள் மற்றும் சர்ச்சைகளைத் தொடர்ந்து திரைப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் எனக் கூறப்படும் ஜனநாயகன் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியும் நிலவுகிறது.

கோவை, போத்தனூர் பகுதியில் உள்ள அரசன் திரையரங்கில் அதிகாலை முதலே திரண்ட ரசிகர்கள், 15 அடி உயர பேனர்கள் அமைத்து, வாழைத் தோரணங்கள் கட்டி, மேளதாள இசையுடன் ஆட்டம், பாட்டம் நடத்தி திரைப்படத்தை வரவேற்றனர்.

மூதாட்டிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் நடனமாடி, கோஷங்களை எழுப்பி உற்சாகமாக கொண்டாடினர். இதனால் திரையரங்கு வளாகம் முழுவதும் திருவிழா போன்று காட்சியளித்தது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: