வாடிக்கையாளர்கள் குவிந்ததால் விற்பனை மேளாவை நீட்டிக்கத் திட்டம் : துடியலூர் அருகே ஆயிரக் கணக்கான கார்கள் அணிவகுப்பு!
கோவை, மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகே நடைபெற்று வரும் பிரம்மாண்டமான பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனக் கண்காட்சி மற்றும் விற்பனை மேளாவில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் குவிந்து தங்களுக்குப் பிடித்த வாகனங்களை மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்.
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட முன்னணிப் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகன (Used Cars) விற்பனை நிறுவனங்கள் இணைந்து நடத்திய அதிரடி விற்பனை மேளா கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தக் கண்காட்சியில் பழமையான பாரம்பரியமிக்க 'பிரிமியம் பத்மினி' (Premier Padmini) கார்கள் முதல் சந்தைக்கு வந்த அதிநவீன ரக மாடர்ன் நான்கு சக்கர வாகனங்கள் வரை ஆயிரக் கணக்கான கார்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. ஒரே இடத்தில் பல்வேறு பிராண்டுகளின் கார்களை நேரில் பார்த்துத் தேர்வு செய்ய முடிவதால், இந்த மேளா வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்து உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் குடும்பங்களின் தேவைகளும் பயணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் வெளியூர்களுக்குச் செல்லும் போது, பொதுப் போக்குவரத்து அல்லது பேருந்துகளில் குடும்பத்துடன் பயணிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. மேலும் அதிக நேரம் விரயமாவதோடு, நீண்ட நேரப் பயணத்தால் உடல்நலக் குறைபாடும் உடல் அசதியும் ஏற்படுகிறது.
ஒரு குடும்பத்தினர் பாதுகாப்பாகவும், விரைவாகவும், எவ்வித உடல் அசதியுமின்றி உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் சென்று வருவதற்குச் சொந்தமாக நான்கு சக்கர வாகனம் வைத்து இருப்பதே சிறந்தது என்பதால், பொதுமக்கள் மத்தியில் கார்களின் பயன்பாடும் தேவையும் பெருமளவில் அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக, இந்த மேளாவில் ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து, ஒரே இடத்தில் தங்களுக்குப் பிடித்தமான கார்களைப் பார்வையிட்டு, மற்றும் வசதிக்கு ஏற்ற வாகனங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.
மக்கள் இடையே கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர்களின் வருகை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாக, இந்த விற்பனை மேளாவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க விற்பனை நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.

0 கருத்துகள்: